புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு : 259

புனை கழலோயே!


புனை கழலோயே!

பாடியவர் :

  கோடை பாடிய பெரும்பூதனார்.

திணை :

  கரந்தை.

துறை :

  செருமலைதல் (பிள்ளைப் பெயர்ச்சியுமாம்).

ஏறுஉடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது,
இலைபுதை பெருங்காட்டுத் தலைகரந்து இருந்த
வல்வில் மறவர் ஒடுக்கம் காணாய்,
செல்லல், செல்லல்; சிறக்க நின், உள்ளம்;
முதுகுமெய்ப் புலைத்தி போலத் . . . . [05]

தாவுபு தெறிக்கும் ஆன்மேல்;
புடையிலங்கு ஒள்வாள் புனைகழ லோயே!

பொருளுரை :

ஆனிரை மீட்டுவரும் வீரனைப் பாராட்டிப் பாடும் பாடல் இது. அவன் வாளேந்திய வீரன். காலில் வீரக்கழல் அணிந்த வீரன். வெட்சிவீரர்கள் கவர்ந்து சென்ற ஆனிரைகளை மீட்டுவருகிறான். பசுக்களும் காளையும் கலந்திருக்கும் ஆனிரைக் கூட்டம் அது. அவை பழக்கத்தால் தம் ஊரை நோக்கிச் செல்கின்றன. முருகேறி ஆடும் புலத்தி போலத் துள்ளிக் குதித்துக்கொண்டு செல்கின்றன. நீ செல்லாதே! செல்லாதே! உன் துணிவு சிறக்கட்டும்! இலையடர்ந்த காட்டில் ஆனிரைகளைக் கவர்ந்துசென்ற வெட்சியார், வல்வில் மறவர், தம் தலையை மறைத்துக்கொண்டு மீட்க வருபவரைத் தாக்கக் காத்திருக்கின்றனர். அவர்களைப் பார். அவர்களுடன் போர் புரியக் காத்திரு!