புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு : 258
தொடுதல் ஓம்புமதி!
தொடுதல் ஓம்புமதி!
பாடியவர் :
உலோச்சனார்.
திணை :
வெட்சி.
துறை :
உண்டாட்டு.
தெறிப்ப விளைந்த தீங்கந் தாரம்
நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு,
பச்சூன் தின்று, பைந்நிணப் பெருத்த
எச்சில் ஈர்ங்கை விற்புறம் திமிரிப், . . . . [05]
புலம்புக் கனனே, புல்அணற் காளை,
ஒருமுறை உண்ணா அளவைப், பெருநிரை
ஊர்ப்புறம் நிறையத் தருகுவன்; யார்க்கும்
தொடுதல் ஓம்புமதி முதுகட் சாடி;
ஆதரக் கழுமிய துகளன், . . . . [10]
காய்தலும் உண்டு, அக் கள்வெய் யோனே.
பொருளுரை :
ஆனிரை கவர்ந்துவரும் வீரன் ஒருவனுக்குச் சாடியில் விளைந்த கள்ளை விருந்தாகத் தாருங்கள் - என்று கூறுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. ‘காந்தாரம்’ என்பது ஒருவகைக் கள். அது முதிர்ந்த காரைப்பழம் போல நுரை விட்டுக்கொண்டு விளைந்திருக்கும். இந்த வீரன் ஆனிரைகளைக் கவர்ந்துகொண்டுவந்து இந்தக் கள்ளுக்கு விலையாக வழங்குவான். கள்ளுண்ணும்போது பச்சையாகச் சுடப்பட்ட கறியை உண்பான். அதன் நிணம் (எண்ணெய்ப்பசை) ஒட்டிக்கொண்டிருக்கும் எச்சில் கை காய்வதற்கு முன்பு வில்லை எடுத்துக்கொண்டு பகைவர் நாட்டுக்குச் செல்வான். அவன் இளந்தாடி முளைக்கும் காளை. மற்றவர்கள் ஒருமுறை ஆர அமர உண்டு முடிப்பதற்கு முன்பாக நிகப் பெரிய ஆனிரைக் கூட்டத்தைக் கொண்டுவந்து ஊருக்கு வெளியே நிறுத்துவான். உங்களிடம் உள்ள முதிர்ந்த கள்ளை உடைய சாடியை யாருக்காகவும் திறக்காதீர்கள். கள்ளை விரும்பும் அவன் எரிந்து விழவும் கூடும் (சினம் கொள்ளக்கூடும்).