புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு : 257

செருப்பிடைச் சிறு பரல்!


செருப்பிடைச் சிறு பரல்!

பாடியவர் :

  பெயர் தெரிந்திலது.

திணை :

  வெட்சி.

துறை :

  உண்டாட்டு.

செருப்புஇடைச் சிறுபரல் அன்னன்; கணைக்கால்,
அவ்வயிற்று அகன்ற மார்பின், பைங்கண்,
குச்சின் நிரைத்த குரூஉமயிர் மோவாய்ச்,
செவிஇறந்து தாழ்தரும் கவுளன், வில்லொடு,
யார்கொலோ, அளியன் தானே? தேரின் . . . . [05]

ஊர்பெரிது இகந்தன்றும் இலனே; அரண்எனக்
காடுகைக் கொண்டன்றும், இலனே; காலைப்,
புல்லார் இனநிரை செல்புறம் நோக்கிக்,
கையின் சுட்டிப் பைஎன எண்ணிச்,
சிலையின் மாற்றி யோனே; அவைதாம் . . . . [10]

மிகப்பல ஆயினும், என்னாம் - எனைத்தும்
வெண்கோள் தோன்றாக் குழிசியொடு,
நாள்உறை மத்தொலி கேளா தோனே?

பொருளுரை :

இவன் செருப்புக் காலில் உருத்தும் சிறு பறழ்கல் போன்றவன். நடக்கும்போது சிறிய கல் செருப்பில் புகுந்துவிடுவது உண்டு. நடப்பவர் அதனை மிதித்துக்கொண்டு நடக்கமுடியாது. காலைக் குத்தி உறுத்தும். அதுபோல எதிராளிகள் இவனை மிதிக்க முடியாது. கதவைத் திறக்கமுடியாமல் சாத்தும் கணையமரம் போன்ற கால்கள், அழகிய வயிறு, அகன்ற மார்பு, குச்சுப்புல் (தருப்பைப் புல்) போன்று நெருங்கித் தாடி முளைத்திருக்கும் மோவாய், காதைக் கடந்து வெளிப்படும் கன்னம்.