புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு : 255

முன்கை பற்றி நடத்தி!


முன்கை பற்றி நடத்தி!

பாடியவர் :

  வன்பரணர்.

திணை :

  பொதுவியல்.

துறை :

  முதுபாலை.


பாடல் பின்னணி :

போர் முடிந்தபின் போர்க்களத்தில் வீழ்ந்த கணவனைக் கண்டாள் ஒரு பெண். அவன் உடலைத் தழுவிக் கண்ணீர் வடித்தாள். அக்காட்சியைக் கண்ட புலவர் வன்பரணர் வடித்த பாடல் இது.

ஐயோ எனின் யான் புலி அஞ்சுவலே,
அணைத்தனன் கொளினே அகன் மார்பு எடுக்கல்லேன்,
என் போல் பெருவிதிர்ப்பு உறுக, நின்னை
இன்னாது உற்ற அறன் இல் கூற்றே,
நிரை வளை முன் கை பற்றி . . . . [05]

வரை நிழல் சேர்கம் நடந்திசின் சிறிதே.

பொருளுரை :

ஐயோ என்று நான் கதறினால் புலி வந்து விடுமோ என்று அஞ்சுகிறேன். உன்னை அணைத்துக் கொண்டு செல்லலாம் என்றால் உன் அகன்ற மார்புடைய உடலை என்னால் தூக்க முடியவில்லை. உன்னைக் கொன்ற அறம் இல்லாத கூற்றம் என்னைப் போல் பெரிது நடுக்கமுறுவானாக! வரிசையான வளையல்களையுடைய என் முன்கையைப் பற்றிக் கொண்டு நீ மெல்ல நடந்தால் நாம் மலையின் நிழலுக்குச் சென்றுவிடலாம்.

குறிப்பு :

சின் - மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை - ச. பாலசுந்தரம் உரை). விதிர்ப்பு - அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கம் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 20). இன்னாது (4) - ஒளவை துரைசாமி உரை - இன்னாது இறந்துபாடு, சாக்காடு ஈண்டு இன்னாது எனப்பட்டது.

சொற்பொருள் :

ஐயோ எனின் - ஐயோ என்று, யான் - நான், புலி அஞ்சுவலே - புலி வந்து விடுமோ என்று அஞ்சுகிறேன் (அஞ்சுவல் - தன்மையொருமை வினைமுற்று, ஏகாரம் அசைநிலை), அணைத்தனன் கொளினே - நான் அணைத்துக் கொள்ளலாம் என்றால், அகன் - அகன்ற, மார்பு - மார்பு, எடுக்கல்லேன் - என்னால் எடுக்க இயலவில்லை, என் போல் - என்னைப் போல், பெரு - பெரிய, விதிர்ப்பு - நடுக்கம், உறுக - உண்டாகுக, நின்னை - உன்னை, இன்னாது - துன்பத்தில் (மரண துன்பத்தில்), உற்ற - நேரச் செய்த, அறன் இல் - அறம் இல்லாத (அறன் - அறம் என்பதன் போலி), கூற்றே - கூற்றுவனே, நிரை - வரிசை, வளை - வளையல்கள் நிறைந்த, முன் கை - முன் கை, பற்றி - பிடித்துக் கொண்டு, வரை - மலை, நிழல் - நிழல், சேர்கம் - சேர்வோம், நடந்திசின் - நடந்து வருக (சின் - முன்னிலை அசைச் சொல்), சிறிதே - சிறிது (ஏகாரம் அசைநிலை)