புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 250

மனையும் மனைவியும்!


மனையும் மனைவியும்!

பாடியவர் :

  தாயங் கண்ணியார்.

பாடப்பட்டோன் :

  

திணை :

  பொதுவியல்.

துறை :

  தாபதநிலை.


பாடல் பின்னணி:

செல்வத்துடன் வாழ்ந்த ஒருவன் இறந்த பிறகு, அவன் மனைவி கைம்மை நோன்பை மேற்கொண்டாள். அவளைக் கண்ட புலவர் இவ்வாறு பாடுகின்றார்.

மலிந்த கொழுந் துவை அடிசில்,
இரவலர்த் தடுத்த வாயில், புரவலர்
கண்ணீர்த் தடுத்த தண் நறும் பந்தர்க்,
கூந்தல் கொய்து, குறுந்தொடி நீக்கி,
அல்லி உணவின் மனைவியொடு, இனியே . . . . [05]

புல்லென்றனையால் வளங்கெழு திருநகர்,
வான் சோறு கொண்டு, தீம் பால் வேண்டும்,
முனித்தலைப் புதல்வர் தந்தை,
தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே.

பொருளுரை:

செல்வமுடைய அழகிய மாளிகையே! நன்கு தாளித்த வளமான துவையலுடன் கூடிய உணவை அளித்து இரவலர்களை வேறு எங்கும் செல்ல முடியாமல் தடுத்த வாயிலையும், ஆதரவைத் தேடி வந்தவர்களின் கண்ணீரைத் துடைத்த குளிர்ச்சி மிக்க நறுமணமுள்ள பந்தலையும் உடையதாக நீ முன்பு இருந்தாய்.

வெள்ளைச் சோற்றை உண்டு இனிய பாலை விரும்பிய குடுமித் தலையையுடைய புதல்வர்களின் தந்தை தனியிடமாகிய சுடுகாட்டை அடைந்த பின்பு, அவனுடைய மனைவி கூந்தலைக் களைந்து, சிறிய வளையல்களை நீக்கி, அல்லி அரிசியுடைய உணவை உண்கின்றாள். இப்பொழுது நீயும் அவளைப் போன்று பொலிவிழந்து உள்ளாய்.

சொற்பொருள்:

குய் குரல் மலிந்த கொழுந்துவை அடிசில் - நன்கு தாளித்த வளமான துவையலுடன் கூடிய உணவு, இரவலர்த் தடுத்த வாயில் - இரவலர்களை வேறு எங்கும் செல்ல முடியாதபடி தடுத்த வாசல், புரவலர் கண்ணீர்த் தடுத்த - ஆதரவு தேடி வந்தவர்களின் கண்ணீரைத் துடைத்த, தண் நறும் பந்தர் - குளிர்ச்சி மிக்க நறுமணமான பந்தல், கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி - கூந்தலைக் களைந்து சிறிய வளையல்களை நீக்கி, அல்லி உணவின் மனைவியொடு - அல்லி அரிசியுடைய மனைவியுடன், இனியே புல்லென்றனையால் - இப்பொழுது பொலிவிழந்து உள்ளாய் (புல்லென்றனையால் - ஆல் அசைநிலை), வளங்கெழு திரு நகர் - செல்வமுடைய அழகிய மாளிகை, வான் சோறு கொண்டு தீம் பால் வேண்டும் - வெள்ளைச் சோற்றை உண்டு இனிய பாலை விரும்பி, முனித்தலைப் புதல்வர் தந்தை - குடுமித் தலையையுடைய புதல்வர்களின் தந்தை, தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே — தனியிடமாகிய சுடுகாட்டை அடைந்த பின்பு (பின்னே - ஏகாரம் அசைநிலை)