புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 249

சுளகிற் சீறிடம்!


சுளகிற் சீறிடம்!

பாடியவர் :

  தும்பி சொகினனார்; தும்பிசேர் கீரனார் என்பதும் ஆம்.

திணை :

  பொதுவியல்.

துறை :

  தாபதநிலை.

குறிப்பு :

  காஞ்சித் தினைத் துறைகளுள் ஒன்றான, 'தாமே யேங்கிய தாங்கரும் பையுள்' என்பதற்கு மேற்கோள் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். புறத். சூ. 24 உரை).

கதிர்மூக்கு ஆரல் கீழ்ச் சேற்று ஒளிப்பக்,
கணைக்கோட்டு வாளை மீநீர்ப் பிறழ,
எரிப்பூம் பழனம் நெரித்துஉடன் வலைஞர்
அரிக்குரல் தடாரியின் யாமை மிளிரச்,
பனைநுகும்பு அன்ன சினைமுதிர் வராலொடு, . . . . [05]

உறழ்வேல் அன்ன ஒண்கயல் முகக்கும்,
அகல்நாட்டு அண்ணல் புகாவே, நெருநைப்
பகல்இடம் கண்ணிப் பலரொடும் கூடி,
ஒருவழிப் பட்டன்று; மன்னே! இன்றே
அடங்கிய கற்பின்; ஆய்நுதல் மடந்தை, . . . . [10]

உயர்நிலை உலகம் அவன்புக ..... ..... வரி
நீறாடு சுளகின் சீறிடம் நீக்கி,
அழுதல் ஆனாக் கண்ணள்,
மெழுகு, ஆப்பிகண் கலுழ்நீ ரானே.

பொருளுரை:

கதிர் போலும் மூக்கினை உடைய ஆரல்மீன் சேற்றில் பிறழும்போது பருத்து வளைந்திருக்கும் வாளைமீன் நீரின்மேல் மிதந்து வரும்போது பூத்திருக்கும் பழமையான வயலில் நெரித்துப் பிடித்து அத்துடன் அரி ஓசை செய்யும் தடாரி போல் இருக்கும் ஆமை வெளிப்படுகையில் பனை நுங்கு போல் நிறம் கொண்ட சினை முதிர்ந்திருக்கும் வரால் ஊடோடுகையில் வேல் போல் புறழும் கயல் மீனைப் பிடித்து, அனைத்தையும் பிடித்து. வலைஞர் வழங்கத், தன் அண்ணலோடு (தலைவனோடு) பலரும் கூடிப் பகல்பொழுதெல்லாம் உண்டபோது தானும் கூடி உண்டாள். இன்று, கணவன் வாழும் காலத்தில் துலங்கிக் கிடந்த கற்பு அவன் மாண்டுபோன பின்னர் தன்னுள் அடங்கிக் கிடப்ப, ஆராயும் அழகு கொண்ட நெற்றியை உடைய மடந்தைப் பருவத்து அந்தப் பெண் நெற்றியில் வரிவரியாத் தெரியும் திருநீறு பூசியவளாய் தரையில் முறம் அளவு பரப்பளவை சாணத்தால் (ஆப்பி) மெழுகினாள். அவள் அழும் கண்ணீரும் மெழுகும் சாணத்தில் விழுந்து தரையை மெழுகிக்கொண்டிருந்தது. (மெழுகிய அந்தத் தரையில் இட்டுத்தான் இன்று உணவு உண்ணப்போகிறாள்).