புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 248

அளிய தாமே ஆம்பல்!


அளிய தாமே ஆம்பல்!

பாடியவர் :

  ஒக்கூர் மாசாத்தனார்.

திணை :

  பொதுவியல்.

துறை :

  தாபதநிலை.


பாடல் பின்னணி:

தன் கணவனை இழந்த பெண் ஒருத்தி கைம்மை நோன்பை மேற்கொண்டாள். அவள் வருந்தி இந்தப் பாடலைப் பாடுகின்றாள்.

அளிய தாமே சிறு வெள்ளாம்பல்,
இளையம் ஆகத் தழையாயினவே, இனியே,
பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப், பொழுது மறுத்து
இன்னா வைகல் உண்ணும்,
அல்லிப்படூஉம் புல் ஆயினவே . . . . [05]

பொருளுரை:

இரங்கத்தக்கன, சிறிய வெள்ளை அல்லிக் கொடிகள். சிறு வயதில் அல்லியின் இலைகள் எனக்குத் தழை ஆடையாய் இருந்தன. இப்பொழுது என் பெரும் செல்வமுடைய கணவன் இறந்ததால், உண்ண வேண்டிய வேளையில் உண்ணாது துன்பத்துடன் தினமும் உண்ணும் புல்லரிசியாக இந்த அல்லி பயன்படுகின்றது.

குறிப்பு:

அல்லிப் படுஉம் புல் ஆயினவே (5) - உ. வே. சாமிநாதையர் உரை - அல்லியிடத்துண்டாம் புல்லரிசியாய் உதவின. நெல் அல்லா உணவெல்லாம் புல்லென்றால் மரபு. புல்லரிசி - சென்னைப் பல்கலைக்கழக அகராதி - பஞ்சகாலத்தில் ஏழைகள் உண்ணும் அரிசி போன்ற தானியம்.

சொற்பொருள்:

அளிய தாமே - இரங்கத்தக்கன, சிறு வெள்ளாம்பல் - சிறிய வெள்ளை அல்லிக் கொடி, இளையம் ஆகத் தழையாயினவே - சிறு வயதில் அல்லியின் இலைகள் எனக்கு தழை ஆடையாய் இருந்தன (இளையம் - தன்மைப் பன்மை, தழையாயினவே - ஏகாரம் அசைநிலை), இனியே பெருவளக் கொழுநன் மாய்ந்தென - இப்பொழுது என் பெரும் செல்வமுடைய கணவன் இறந்ததால், பொழுது மறுத்து இன்னா வைகல் உண்ணும் அல்லிப்படூஉம் புல் ஆயினவே - உண்ண வேண்டிய வேளையில் உண்ணாது துன்பத்துடன் தினமும் உண்ணும் புல்லரிசியாக இந்த அல்லி பயன்படுகின்றது (அல்லிப்படுஉம் - அளபெடை, ஆயினவே - ஏகாரம் அசைநிலை)