புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 246
பொய்கையும் தீயும் ஒன்றே!
பொய்கையும் தீயும் ஒன்றே!
பாடியவர் :
பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு.
திணை :
பொதுவியல்.
துறை :
ஆனந்தப் பையுள்.
செல்கெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே;
துணிவரிக் கொடுங்காய் வாள்போழ்ந் தட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது, . . . . [05]
அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள்என் சாந்தொடு புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை, வல்சி ஆகப்,
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ; . . . . [10]
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்குஅரிது ஆகுக தில்ல; எமக்குஎம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற
வள்இதழ் அவிழ்ந்த தாமரை
நள்இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே! . . . . [15]
பொருளுரை:
அரசன் பூதபாண்டியன் இறந்தான். அவன் மனைவி பெருங்கோப்பெண்டு இறந்த கணவனை எரிக்க மூட்டிய தீயில் தானும் விழுந்து சாகச்செல்லும்போது சான்றோர் தடுக்கின்றனர். அவர்களுக்கு அந்த அரசி சொல்கிறாள். பல்லாற்றானும் பண்பில் மேம்பட்ட சான்றவர்களே! “போகாதே” என்று சொல்லி என் கணவனுடன் நான் செல்வதைச் சூழ்ந்துகொண்டு தடுக்கும் பொல்லாத சான்றோரே! அரிந்த வெள்ளரிக்காய் விதை போல் தோன்றும் நெய் சேர்க்காமல், இலையில் கைப்பிடி அளவு அரிசியில் வெள்ளை - எள் சாந்தம் சேர்த்துப் புளி ஊற்றி வெந்த சோற்றை மட்டும் உண்டுகொண்டும், பரப்பிய பரல் - கற்களைப் பாயாக்கிப் படுத்துக்கொண்டும் வாழும் ‘உயவல் பெண்டிர்’ (உய்ய - வல்ல - பெண்டிர்) நான் இல்லை. எல்லாருக்கும் இடம் கொடுக்கும் பெருங்காட்டில் என் பெருந்தோளில் இன்பம் தந்த கணவன் மாய்ந்து எரியும் ஈமத் தீ உங்களுக்கு நெருங்குவதற்கு அரிதாக இருக்கட்டும். எனக்கு அது அரும்பே இல்லாமல் முழுதுமாக மலர்ந்திருக்கும் குளுமையான தாமரைப் பொய்கையும், ஈமத் தீயும் ஒன்றுதான். (நான் ஈமத் தாமரையில் குளிக்கிறேன்)