புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 245

என்னிதன் பண்பே?


என்னிதன் பண்பே?

பாடியவர் :

  சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை.

திணை :

  பொதுவியல்.

துறை :

  கையறுநிலை.


பாடல் பின்னணி:

சேர மன்னன் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதையின் மனைவி இறந்தாள். அவள் உடல் ஈமத் தீயில் எரிக்கப்பட்டது. அதைக் கண்ட மன்னன், வருந்திப் பாடிய பாடல் இது.

யாங்குப் பெரிது ஆயினும், நோய் அளவு எனைத்தே
உயிர் செகுக்கல்லா மதுகைத்து அன்மையின்,
கள்ளி போகிய களரியம் பறந்தலை
வெள்ளிடைப் பொத்திய விளை விறகு ஈமத்து
ஒள் அழல் பள்ளிப் பாயல் சேர்த்தி, . . . . [05]

ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை,
இன்னும் வாழ்வல் என் இதன் பண்பே?

பொருளுரை:

என் மனைவியைப் பிரிந்ததால் நான் உற்ற நோய் எவ்வளவு பெரியது ஆனாலும், அதற்கு என் உயிரைப் போக்க முடியாத வலிமை இல்லாததால், கள்ளிச் செடிகள் படர்ந்த களர் நிலமாகிய பாழிடத்தில் பாடையில் மூட்டிய ஒளியுடைய ஈமத் தீயுடைய விறகுப் பள்ளியில் படுக்க வைக்கப்பட்ட அவள் மேல் உலகத்திற்குச் சென்ற பின்பும் நான் வாழ்கின்றேன். இந்த உலகத்தின் தன்மைதான் என்ன?

குறிப்பு:

உ. வே. சாமிநாதையர் உரை - எனைத்தென்றது உயிரைப் போக்க மாட்டாமையின் நோயை இகழ்ந்து கூறியவாறு.

சொற்பொருள்:

யாங்குப் பெரிது ஆயினும் - எவ்வளவு பெரியது ஆகினும், நோய் அளவு எனைத்தே உயிர் செகுக்கல்லா மதுகைத்து அன்மையின் - என் உயிரைப் போக்க முடியாத வலிமை இல்லாமையால் (எனைத்தே - ஏகாரம் அசைநிலை), கள்ளி போகிய களரியம் பறந்தலை - கள்ளிச் செடிகள் படர்ந்த களர் நிலமாகிய பாழிடம், வெள்ளிடைப் பொத்திய - பாடையில் மூட்டிய, விளை விறகு ஈமத்து ஒள் அழல் பள்ளிப் பாயல் சேர்த்தி - தீயை விளைவிக்கும் விறகுகளால் அமைத்த ஒளியுடைய ஈமத் தீயுடைய பள்ளியில் படுக்க வைத்து, ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை இன்னும் வாழ்வல் - அங்கு அவள் இறந்த பின்பும் நான் வாழ்கின்றேன், என் இதன் பண்பே - இந்த உலகத்தின் தன்மைதான் என்ன (பண்பே - ஏகாரம் அசைநிலை)