புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 236
கலந்த கேண்மைக்கு ஒவ்வாய்!
கலந்த கேண்மைக்கு ஒவ்வாய்!
பாடியவர் :
கபிலர்.
திணை :
பொதுவியல்.
துறை :
கையறுநிலை
பாடல் பின்னணி:
தன் நண்பர் பாரி இறந்த பின்னர், மிகுந்த துக்கத்தில் ஆழ்கின்றார் புலவர் கபிலர். பாரியின் மகளிரைப் பொறுப்பானவரிடம் ஒப்படைத்துவிட்டு, நண்பனை அடையத் துடிக்கின்றார்.
சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசைவு ஆகும்,
மலை கெழு நாட மா வண் பாரி,
கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் நீ என்
புலந்தனை ஆகுவை புரந்த யாண்டே . . . . [05]
பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது,
ஒருங்கு வரல் விடாஅது ‘ஒழிக’ எனக் கூறி,
இனையை ஆதலின் நினக்கு மற்று யான்
மேயினேன் அன்மையானே, ஆயினும்,
இம்மை போலக் காட்டி, உம்மை . . . . [10]
இடை இல் காட்சி நின்னோடு
உடன் உறைவு ஆக்குக, உயர்ந்த பாலே.
பொருளுரை:
ஆண் குரங்கு கிழித்து உண்ட முரசைப் போன்ற பெரிய பழம், மலையில் வாழும் வில்லுடைய மக்களுக்கு, சில நாட்களுக்கு வைத்து உண்ணும் உணவு ஆகும். அத்தகைய பலாமரங்கள் நிறைந்த மலைகள் பொருந்திய நாட்டையுடைய பெரிய வள்ளல் தன்மை வாய்ந்த பாரி!
நம்முடைய நட்புக்கு பொருந்தாத முறையில் நீ நடந்து கொண்டாய். நீ என்னை வெறுத்தாய் போலும். என்னை நீ பல ஆண்டுகளாகப் பாதுகாத்தாலும், பெருமையுடைய தலைமை மிக்க நட்பிற்குப் பொருந்தாது, உன்னுடன் நான் செல்வதற்கு ஒத்துக்கொள்ளாது, ‘இங்கேயே இரு’ எனக் கூறிவிட்டுச் சென்றாய். இவ்வாறு நீ வேறுபட்டதால், உனக்கு நான் ஏற்றவனாக இல்லை என்று எண்ணுகின்றேன். ஆனாலும், இப்பிறவியில் நாம் ஒன்றாக இருப்பதைப் போல், மறுபிறப்பில் நாம் இடைவிடாது சேர்ந்து இருக்கும் நிலைமையைக் காட்டி, உன்னோடு நான் ஒன்றாக இருப்பதற்கு வழி செய்யட்டும், உயர்ந்த விதி.
சொற்பொருள்:
கலை உணக் கிழிந்த - ஆண் குரங்கு கிழித்து உண்ட (உண உண்ண என்பதன் விகாரம்), முழவு மருள் பெரும் பழம் - முரசைப் போன்ற பெரிய பழம் (மருள் - உவம உருபு), சிலை கெழு குறவர்க்கு - வில்லையுடைய மலையில் வாழும் மக்களுக்கு, அல்கு மிசைவு ஆகும் - வைத்து உண்ணும் உணவு ஆகும், மலை கெழு நாட - மலையுடைய நாட்டையுடையவனே, மா வண் பாரி - பெரிய வள்ளல் தன்மை வாய்ந்த பாரி, கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் நீ - கலந்த நட்புக்கு பொருந்தாத முறையில் நீ நடந்துக் கொண்டாய், என் புலந்தனை ஆகுவை - நீ என்னை வெறுத்தாய் போலும், புரந்த யாண்டே - என்னை நீ பல ஆண்டுகளாகப் பாதுகாத்தாலும், பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது - பெருமையுடைய தலைமை மிக்க நட்பிற்குப் பொருந்தாது, ஒருங்கு வரல் விடாஅது - உன்னுடன் நான் செல்வதற்கு ஒத்துக்கொள்ளாது (விடாஅது - அளபெடை), ஒழிக எனக் கூறி - இங்கே இரு எனக் கூறி, இனையை ஆதலின் - இவ்வாறு நீ வேறுபட்டதால், நினக்கு மற்று யான் மேயினேன் அன்மையானே - உனக்கு நான் ஏற்றவனாக இல்லை என்று எண்ணுகின்றேன் (அன்மையானே - ஏகாரம் அசைநிலை), ஆயினும் - ஆனாலும், இம்மை போலக் காட்டி - இப்பிறவியில் நாம் ஒன்றாக இருப்பதைப் போல் காட்டி, உம்மை இடை இல் காட்சி - மறுபிறப்பில் நாம் இடைவிடாது சேர்ந்து இருக்கும் நிலைமையைக் காட்டி, நின்னோடு உடன் உறைவு ஆக்குக - உன்னோடு நான் ஒன்றாக இருப்பதற்கு வழி செய்யட்டும், உயர்ந்த பாலே - உயர்ந்த விதி (பாலே - ஏகாரம் அசைநிலை)