புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 234
உண்டனன் கொல்?
உண்டனன் கொல்?
பாடியவர் :
வெள்ளெருக்கிலையார்.
பாடப்பட்டோன் :
வேள் எவ்வி.
திணை :
பொதுவியல்.
துறை :
கையறுநிலை.
பாடல் பின்னணி:
கொடைவள்ளல் எவ்வி இறந்ததை அறிந்த புலவர் வெள்ளெருக்கிலையார், அவருடைய இல்லத்திற்குச் சென்றார். அங்கு எவ்வியின் மனைவி கைம்மை நோன்பு நோற்பதைக் கண்டார். மிகவும் வருத்தமுற்று இப்பாடலைப் பாடினார்.
பிடி அடி அன்ன சிறு வழி மெழுகித்
தன் அமர் காதலி புன் மேல் வைத்த
இன் சிறு பிண்டம் யாங்கு உண்டனன் கொல்
உலகு புகத் திறந்த வாயில் . . . . [05]
பலரோடு உண்டல் மரீஇயோனே?
பொருளுரை:
வருந்துகின்றேன் நான். என்னுடைய நெடிய வாழ்நாட்கள் அழியட்டும். பெண் யானையின் அடி அளவே உள்ள சிறு இடத்தை மெழுகி, தன்னை விரும்பிய மனைவி புல்லின் மீது அவனுக்காக வைத்த இனிய சிறிதளவு உணவை எப்படி உண்ணுவான், உலகத்து மக்கள் எல்லாம் புகுந்து உண்ணக்கூடிய திறந்த வாசலை உடைய, பலரோடும் சேர்ந்து உண்ட வேள் எவ்வி?
குறிப்பு:
இன் சிறு பிண்டம் - உ. வே. சாமிநாதையர் உரை - இகழ்ச்சிக்குறிப்பு.
சொற்பொருள்:
நோகோ யானே - வருந்துகின்றேன் நான் (நோகோ - நோகு செய்கென்னும் தன்மை வினை, ஓகாரம் அசைநிலை, இரக்கக் குறிப்பு), தேய்கமா காலை - என்னுடைய நெடிய வாழ்நாட்கள் அழியட்டும் (மா - அசைநிலை), பிடி அடி அன்ன சிறு வழி மெழுகி - பெண் யானையின் கால் அளவே உள்ள சிறு இடத்தை மெழுகி, தன் அமர் காதலி - தன்னை விரும்பிய மனைவி, புன் மேல் வைத்த இன் சிறு பிண்டம் - புல்லின் மீது வைத்த இனிய சிறிதளவு உணவு, யாங்கு உண்டனன் கொல் - எப்படி உண்ணுவான், உலகு புகத் திறந்த வாயில் - உலகத்து மக்கள் எல்லாம் புகுந்து உண்ணக்கூடிய திறந்த வாசல், பலரோடு உண்டல் மரீஇயோனே - பலரோடும் சேர்ந்து உண்டவன் (மரீஇயோனே - அளபெடை, ஏகாரம் அசைநிலை)