புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 232

கொள்வன் கொல்லோ!


கொள்வன் கொல்லோ!

பாடியவர் :

  அவ்வையார்.

பாடப்பட்டோன் :

  அதியமான் நெடுமான் அஞ்சி.

திணை :

  பொதுவியல்.

துறை :

  கையறுநிலை.


பாடல் பின்னணி:

அதியமான் இறந்த பிறகு, அவன் நினைவாக நட்டிய நடுகல்லில் மயில் தோகை சூட்டி, கள்ளைப் படைத்து வழிபட்டனர். அப்பொழுது அதியமானை நினைவு கூர்ந்து தன் வருத்தத்தை இப்பாடலில் கூறுகின்றார் ஔவையார்.

இல்லாகியரோ காலை மாலை,
அல்லாகியர் யான் வாழும் நாளே,
நடுகல் பீலி சூட்டி, நார் அரி
சிறு கலத்து உகுப்பவும், கொள்வன் கொல்லோ,
கோடு உயர் பிறங்கு மலை கெழீஇய . . . . [05]

நாடு உடன் கொடுப்பவும் கொள்ளாதோனே?

பொருளுரை:

காலையும் மாலையும் இனி இல்லாமல் போகட்டும்! என் வாழ் நாட்களும் இனி இல்லாமல் போகட்டும்! உயர்ந்த சிகரங்களையுடைய ஒளிரும் மலை பொருந்திய நாட்டைக் கொடுத்தாலும் பெற்றுக் கொள்ளாதவனாகிய அதியமான், தன் நடுகல்லின் மேல் மயிலிறகு சூட்டி, நாரினால் வடிகட்டப்பட்டக் கள்ளைச் சிறிய கலத்தில் கொடுத்தால் ஏற்றுக் கொள்வானோ?

சொற்பொருள்:

இல்லாகியரோ - இல்லாமல் போகட்டும் (இல்லாகியரோ - ஓகாரம் அசைநிலை), காலை மாலை - காலையும் மாலையும், அல்லாகியர் - பயனில்லாது போகட்டும், யான் வாழும் நாளே - நான் வாழும் - நாட்கள் (நாளே - ஏகாரம் அசைநிலை), நடுகல் - வீரனுக்காக நடப்படும் நினைவுக்கல், பீலி - மயில் இறகு, சூட்டி - அணிவித்து, நார் அரி - நாரினால் அரிக்கப்பட்ட, நாரினால் வடிகட்டப்பட்ட (கள்ளை), சிறு கலத்து - சிறிய கலத்தில், சிறிய கிண்ணத்தில், உகுப்பவும் - வார்க்கவும், கொள்வன் கொல்லோ - ஏற்றுக் கொள்வானோ (கொல்லோ - கொல் ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓகாரம் அசைநிலை), கோடு - சிகரம், உயர் - உயர்ந்த, பிறங்கு மலை - ஒளிரும் மலை, கெழீஇய நாடு - பொருந்திய நாடு (கெழீஇய - அளபெடை), உடன் - முழுவதும், கொடுப்பவும் - கொடுத்தாலும், கொள்ளாதோனே - பெற்றுக்கொள்ளாதவன் (கொள்ளாதோனே - ஏகாரம் அசைநிலை)