புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 230
நீ இழந்தனையே கூற்றம்!
நீ இழந்தனையே கூற்றம்!
பாடியவர் :
அரிசில் கிழார்.
பாடப்பட்டோன் :
அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி.
திணை :
பொதுவியல்.
துறை :
கையுறுநிலை.
பாடல் பின்னணி:
அதியமான் போரில் இறந்த பின், புலவர் அரிசில்கிழார், நட்பின் காரணமாக, அதியமானைக் கொன்ற பெருஞ்சேரன் இரும்பொறையைப் பழிக்காமல், கூற்றுவனைப் பழிக்கின்றார்.
வெங்கால் வம்பலர் வேண்டு புலத்து உறையவும்,
களம் மலி குப்பை காப்பு இல வைகவும்,
விலங்கு பகை கடிந்த கலங்காச் செங்கோல்,
வையகம் புகழ்ந்த வயங்கு வினை ஒள் வாள், . . . . [05]
பொய்யா எழினி பொருது களம் சேர,
ஈன்றோள் நீத்த குழவி போலத்
தன் அமர் சுற்றம் தலைத்தலை இனையக்
கடும் பசி கலக்கிய இடும்பை கூர் நெஞ்சமொடு
நோய் உழந்து வைகிய உலகிலும், மிக நனி . . . . [10]
நீ இழந்தனையே அறன் இல் கூற்றம்!
வாழ்தலின் வரூஉம் வயல் வளன் அறியான்,
வீழ் குடி உழவன் வித்து உண்டாஅங்கு
ஒருவன் ஆருயிர் உண்ணாய் ஆயின்,
நேரார் பல் உயிர் பருகி . . . . [15]
ஆர்குவை மன்னோ, அவன் அமர் அடு களத்தே.
பொருளுரை:
கன்றுகளுடைய ஆனிரையின் (பசுக்களின்) கூட்டம் காட்டில் தங்கி இருக்கவும், வறண்ட நிலத்தில் நடந்ததால் வெம்மையுற்ற காலினையுடைய வழிப்போக்கர்கள் தாங்கள் விரும்பிய இடங்களில் தங்கவும், களங்களில் பெரிய நெற்குவியல்கள் காவல் இன்றியே கிடக்கவும், எதிர்த்து வந்த பகையை அழித்து நிலம் கலங்காத செங்கோல் ஆட்சி புரிந்த, உலகத்தார் புகழும் போரைப் புரியும் ஒளி பொருந்திய வாளையுடைய, பொய் கூறாத (வாய்மையுடைய) எழினி இறந்து விட்டான். பெற்ற தாயினால் கைவிடப்பட்ட குழந்தைபோலத் தன்னை விரும்பிய சுற்றம் இடந்தொறும் இடந்தொறும் வருந்த, பசியினால் கலக்கம் மிகுந்த நெஞ்சத்துடன், அவனை இழந்து வருந்தி இருக்கும் இந்த உலகைவிட நீ மிக அதிகமாக இழந்துவிட்டாய் அறம் இல்லாத கூற்றுவனே! தன் வாழ்க்கைக்கு உதவும் வயலின் வளமையை அறியாத குடியில் உள்ள உழவன் ஒருவன் விதைக்க வேண்டிய விதையை விதைக்காமல் உண்டாற்போல, அவனுடைய பெறுவதற்கு அரிய உயிரை நீ உண்ணாது இருந்திருப்பாயாயின், பகைவர்களின் பல உயிர்களை நீ உண்டு நிறைவடைந்திருப்பாய், அவனுடைய பகைவரைக் கொல்லும் போர்க்களத்தில்!
சொற்பொருள்:
கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும் - கன்றுகளுடைய ஆனிரையின் (பசுக்களின்) கூட்டம் காட்டில் தங்கி இருக்கவும், வெங்கால் வம்பலர் வேண்டு புலத்து உறையவும் - வறண்ட நிலத்தில் நடந்ததால் வெம்மையுற்ற காலினையுடைய வழிப்போக்கர்கள் தாங்கள் விரும்பிய இடங்களில் தங்கவும், களம் மலி குப்பை காப்பு இல வைகவும் - களங்களில் பெரிய நெற்குவியல்கள் காவல் இன்றியே கிடக்கவும், விலங்கு பகை கடிந்த கலங்காச் செங்கோல் - எதிர்த்து வந்த பகையை அழித்து நிலம் கலங்காத செங்கோல் ஆட்சி புரிந்த, வையகம் புகழ்ந்த வயங்கு வினை ஒள் வாள் - உலகத்தார் புகழும் போரைப் புரியும் ஒளி பொருந்திய வாளையுடைய, பொய்யா எழினி பொருது களம் சேர - பொய் கூறாத (வாய்மையுடைய) எழினி, ஈன்றோள் நீத்த குழவி போல - பெற்ற தாயினால் கைவிடப்பட்ட குழந்தைபோல, தன் அமர் சுற்றம் தலைத்தலை இனைய - தன்னை விரும்பிய சுற்றம் இடந்தொறும் இடந்தொறும் வருந்த, கடும் பசி கலக்கிய இடும்பை கூர் நெஞ்சமொடு - கடுமையான பசியினால் கலக்கம் மிகுந்த நெஞ்சத்துடன், நோய் உழந்து வைகிய உலகிலும் - அவனை இழந்து வருந்தி இருக்கும் உலகைவிட, மிக நனி நீ இழந்தனையே - நீ மிக அதிகமாக இழந்துவிட்டாய், அறன் இல் கூற்றம் - அறம் இல்லாத கூற்றுவனே (அறன் - அறம் என்பதன் போலி), வாழ்தலின் வரூஉம் வயல் வளன் அறியான் - தன் வாழ்க்கைக்கு உதவும் வயலின் வளமையை அறியாதவன், வீழ் குடி உழவன் வித்து உண்டாஅங்கு - தளர்ந்த குடிகளையுடைய உழவன் ஒருவன் விதையை உண்டாற்போல, ஒருவன் ஆருயிர் உண்ணாய் ஆயின் - அவனுடைய பெறுவதற்கு அரிய உயிரை நீ உண்ணாது இருந்தால், நேரார் பல் உயிர் பருகி - பகைவர்களின் பல உயிர்களை உண்டு, ஆர்குவை - நீ உண்ணுவாய், மன்னோ - மன் கழிவின்கண் வந்தது, ஓகாரம் அசைநிலை, அவன் அமர் அடு களத்தே - அவனுடைய பகைவரைக் கொல்லும் போர்க்களத்தில் (களத்தே - ஏகாரம் அசைநிலை)