புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 227
நயனில் கூற்றம்!
நயனில் கூற்றம்!
பாடியவர் :
ஆடுதுறை மாசாத்தனார்.
பாடப்பட்டோன் :
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை :
பொதுவியல்.
துறை :
கையறுநிலை.
பாடல் பின்னணி:
குளமுற்றத்தில் கிள்ளிவளவன் இறந்ததை அறிந்த ஆவடுதுறை மாசாத்தனார், மனம் ஆற்றாமல் துடித்துப் பாடிய கையறுநிலைப் பாடல் இது.
விரகு இன்மையின் வித்து அட்டு உண்டனை,
இன்னும் காண்குவை நன்வாய் ஆகுதல்,
ஒளிறு வாள் மறவரும், களிறும், மாவும்
குருதி அம் குரூஉப்புனல் பொரு களத்து ஒழிய, . . . . [05]
நாளும் ஆனான் கடந்து அட்டு என்று நின்
வாடு பசி அருத்திய பழி தீர் ஆற்றல்
நின்னோர் அன்ன பொன் இயல் பெரும்பூண்
வளவன் என்னும் வண்டு மூசு கண்ணி
இனையோன் கொண்டனை ஆயின், . . . . [10]
இனி யார் மற்று, நின் பசி தீர்ப்போரே.
பொருளுரை:
மிகுந்த அறிவற்ற, இரக்கம் இல்லாத கூற்றமே! உனக்கு ஆராயும் அறிவு இல்லாததால் விதையை அழித்து உணவாக உண்டாய். எனது சொற்களின் உண்மையை மேலும் காண்பாய். ஒளி வீசும் வாள் கொண்ட வீரர்களும், யானைகளும், குதிரைகளும் போர்க்களத்தில் நிறம் மிகுந்த குருதி வெள்ளத்தில் இறந்தும் அமையாதவனாய், உன் வாட்டும் பசியைத் தணிப்பதற்காக, நாள்தோறும் பகைவரின் படைகளை அழித்து வெல்லும் பழியற்ற ஆற்றல் மிகுந்தவனும், உன்னைப் போன்றவனுமான, பொன்னால் செய்யப்பட்ட பெரும் அணிகலன்களை அணிந்த வளவன் என்னும் வண்டுகள் மொய்க்கும் பூ மாலை அணிந்த மன்னனின் உயிரை எடுத்துக் கொண்டாய். ஆதலால், இனி உன் பசியைத் தீர்ப்பவர் யார்?
சொற்பொருள்:
நனி - மிகுந்த, பேதையே - அறிவற்றவையே, நயன் இல் - இரக்கம் இல்லாத, கூற்றம் - கூற்றுவன், விரகு - ஆராயும் அறிவு, இன்மையின் - இல்லாமையால், வித்து - விதையை, அட்டு - கொன்று, அழித்து, உண்டனை - உண்டாய், இன்னும் - இன்னும், காண்குவை - காண்பாய், நன்வாய் - சொற்களின் உண்மை, ஆகுதல் - ஆவதை, ஒளிறு - ஒளி வீசும், வாள் - வாள், மறவரும் - வீரர்களையும், களிறும் - களிற்று யானைகளையும் (ஆண் யானைகளையும்), மாவும் - குதிரைகளையும், குருதி அம் - குருதி நிறத்து அழகிய, குரூஉ - நிறம் மிகுந்த (குரூஉ - அளபெடை), புனல் - ஆறு, பொரு களத்து - போர்க் களத்தில், ஒழிய - இறக்க, நாளும் - நாள்தோறும், ஆனான் - அமையாதவன், கடந்து - எதிர் சென்று, அட்டு - கொன்று, என்றும் - எப்போதும், நின் - உன், வாடு பசி - வாட்டும் பசி, அருத்திய - தணிப்பதற்கு, ஊட்டிய - ஊட்டிய, பழி தீர் - பழி இல்லாத, ஆற்றல் - திறமை, நின்னோர் அன்ன - உன்னைப் போன்ற, பொன் இயல் - பொன்னால் செய்யப்பட்ட, பெரும் பூண் - பெரிய அணிகலன்கள், வளவன் - கிள்ளிவளவன், என்னும் - என்று அழைக்கப்படும், வண்டு - வண்டுகள், மூசு - மொய்க்கும், கண்ணி - பூ மாலை, இனையோன் - இத் தன்மையுடையோன், கொண்டனை - எடுத்துக் கொண்டாய் (உயிரை), ஆயின் - ஆதலால், இனி யார் - இனி யார், மற்று - மேலும், நின் பசி - உன் பசியை, தீர்ப்போரே - தீர்ப்பவர் (தீர்ப்போரே - ஏகாரம் அசைநிலை)