புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 226
இரந்து கொண்டிருக்கும் அது!
இரந்து கொண்டிருக்கும் அது!
பாடியவர் :
மாறோக்கத்து நப்பசலையார்.
பாடப்பட்டோன் :
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை :
பொதுவியல்.
துறை :
கையறுநிலை.
உற்றன்று ஆயினும், உய்வின்று மாதோ,
பாடுநர் போலக் கைதொழுது, ஏத்தி,
இரந்தன்று ஆகல் வேண்டும், பொலந்தார்
மண்டு அமர் கடக்கும் தானைத் . . . . [05]
திண் தேர் வளவன், கொண்ட கூற்றே.
பொருளுரை:
பொன் மாலை அணிந்த, கொடிய போரில் பகைவரை அழிக்கும் படையையுடைய, திண்மையான தேரினையுடைய வளவனை, பகையுடனோ, சினங்கொண்டோ, தொட்டாலோ, அவனிடமிருந்து தப்பும் வாய்ப்பு இருந்திருக்க முடியாது கூற்றுவனுக்கு.
அதனால், பாடுபவர்களைப் போலக் கைதொழுது, புகழ்ந்து, அவனை வணங்கியிருக்க வேண்டும், அவன் உயிரைக் கொண்ட கூற்றுவன்.
சொற்பொருள்:
செற்றன்று ஆயினும் - பகையுடனோ, செயிர்த்தன்று ஆயினும் - சினங்கொண்டோ, உற்றன்று ஆயினும் - தொட்டாலோ, உய்வின்று - தப்பும் வழியில்லை, மாதோ - மாது, ஓ - அசைநிலைகள், பாடுநர் போல - பாடுபவர்கள் போல, கைதொழுது ஏத்தி - கையால் தொழுதுப் புகழ்ந்து, இரந்தன்று ஆகல் வேண்டும் - வணங்கியிருக்க வேண்டும், பொலந்தார் - பொன் மாலை, மண்டு அமர் கடக்கும் தானை - கொடிய போரில் பகைவரை அழிக்கும் படை, திண் தேர் வளவன் - திண்மையான தேரினையுடை வளவன், கொண்ட கூற்றே - உயிரை எடுத்துக் கொண்ட கூற்று (கூற்றே - ஏகாரம் அசைநிலை)