புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 223
நடுகல்லாகியும் இடங் கொடுத்தான்!
நடுகல்லாகியும் இடங் கொடுத்தான்!
பாடியவர் :
பொத்தியார்.
பாடப்பட்டோன் :
கோப்பெருஞ் சோழன்.
திணை :
பொதுவியல்.
துறை :
கையறுநிலை.
தலைப்போகன்மையின் சிறுவழி மடங்கி,
நிலைபெறு நடுகல் ஆகியக் கண்ணும்
இடங்கொடுத்து அளிப்ப மன்ற, உடம்போடு
இன்னுயிர் விரும்பும் கிழமைத் . . . . [05]
தொல் நட்புடையார், தம் உழைச் செலினே.
பொருளுரை:
பலருக்கு அருள்தரும் நிழல் ஆகி, உலகத்தாரால் மிகவும் சிறப்பாகப் பேசப்பட்டு, தங்கள் அரசாளும் பணியை முற்றிலும் முடிக்காமல் இறந்து, சிறிய இடத்தில் இருந்து, நிலைபெற்ற நடுகல்லாக ஆகிய பொழுதும், உடம்புடன் இனிய உயிர் விரும்பும் உரிமை போலத் தொன்மையான நட்புடையவர்கள் அவர்களிடம் சென்றால், அவர்களுக்கு இடம் கொடுப்பார்கள்.
குறிப்பு:
மன்ற - மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).
சொற்பொருள்:
பலர்க்கு நிழலாகி - பலருக்கு அருள் நிழல் ஆகி, உலகம் மீக்கூறி - உலகத்தாரால் மிகவும் சிறப்பாகப் பேசப்பட்டு, தலைப்போகன்மையின் - அரசாளும் பணியை முற்றிலும் முடிக்காமல், சிறுவழி மடங்கி - சிறிய இடத்தில் இருந்து, நிலைபெறு நடுகல் ஆகியக் கண்ணும் - நிலைபெற்ற நடுகல்லாக ஆகியப் பொழுதும், இடங்கொடுத்து அளிப்ப - இடம் கொடுப்பார்கள், மன்ற - ஓர் அசைச் சொல், உடம்போடு இன்னுயிர் விரும்பும் கிழமை - உடம்புடன் இனிய உயிர் விரும்பும் உரிமைப் போல, தொல் நட்புடையார் தம் உழைச் செலினே - தொன்மையான நட்புடையவர்கள் அவர்களிடம் சென்றால் (செலினே - ஏகாரம் அசைநிலை)