புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 219
உணக்கும் மள்ளனே!
உணக்கும் மள்ளனே!
பாடியவர் :
கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார்.
பாடப்பட்டோன் :
கோப்பெருஞ் சோழன்.
திணை :
பொதுவியல்.
துறை :
கையறுநிலை.
பாடல் பின்னணி:
புலவர் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார் கோப்பெருஞ்சோழனைக் காணச் சென்றார். வடக்கிருந்த மன்னன் உடல் தளர்வினால் அவரிடம் பேசும் நிலையில் இல்லை. “என்னுடன் புலந்து இருக்கின்றாய் போலும்” என்று புலவர் கூறுகின்றார்.
உள் ஆற்றுக் கவலைப் புள்ளி நீழல்
முழூஉ வள்ளூரம் உணக்கும் மள்ள!
புலவுதி மாதோ நீயே,
பலரால் அத்தை நின் குறி இருந்தோரே.
முழூஉ வள்ளூரம் உணக்கும் மள்ள!
புலவுதி மாதோ நீயே,
பலரால் அத்தை நின் குறி இருந்தோரே.
பொருளுரை:
ஆற்றிடை உள்ள நிலத்தில் (அரங்கத்தில்) புள்ளிப்பட்ட மர நிழலில், உடலில் உள்ள தசை அனைத்தையும் வாட்டும் வீரனே, பலர் உன் கருத்திற்கேற்ப உன்னுடன் வடக்கிருந்தனர். நீ என்னை வெறுத்தாய்.
குறிப்பு:
மள்ள (2) - ஒளவை துரைசாமி உரை - அரசு துறந்து வடக்கிருந்து உயிர் நீத்த மிகுதியான் ‘மள்ள’ என்றார்.
சொற்பொருள்:
உள் ஆற்றுக் கவலை - ஆற்றிடை உள்ள நிலம், அரங்கம், புள்ளி நீழல் - புள்ளிப்பட்ட மர நிழல் (நீழல் - நிழல் என்பதன் விகாரம்), முழூஉ வள்ளூரம் உணக்கும் மள்ள - உடலில் உள்ள தசை அனைத்தையும் வாட்டும் வீரனே (முழூஉ - அளபெடை), புலவுதி - நீ வெறுத்தாய், மாதோ - மாது, ஓ அசைநிலைகள், நீயே - நீயே, பலரால் - பலர் (ஆல் அசைநிலை), அத்தை - ஓர் அசைச் சொல், நின் குறி இருந்தோரே - உன் கருத்திற்கேற்ப உன்னுடன் வடக்கிருந்தோர் (இருந்தோரே - ஏகாரம் அசைநிலை)