புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 218
சான்றோர்சாலார் இயல்புகள்!
சான்றோர்சாலார் இயல்புகள்!
பாடியவர் :
கண்ணகனார் நத்தத்தனார் எனவும் பாடம்.
பாடப்பட்டோன் :
திணை :
பொதுவியல்.
துறை :
கையறுநிலை.
சிறப்பு :
பாடல் பின்னணி:
மன்னன் கோப்பெருஞ்சோழன் இறந்த பின் அவனுடைய நண்பரான புலவர் பிசிராந்தையார் பாண்டிய நாட்டிலிருந்து சோழ நாட்டிற்கு வந்து, வடக்கிருந்து உயிர் துறந்தார். அதைக்கண்ட புலவர் கண்ணகனார், அவர்கள் இருவரும் வேறு வேறு நாட்டினரானாலும் நட்பால் ஒன்றுபட்டதை வியந்து வடித்த பாடல் இது.
மா மலை பயந்த காமரு மணியும்,
இடை படச் சேய ஆயினும் தொடை புணர்ந்து
அரு விலை நன் கலம் அமைக்கும் காலை
ஒரு வழித் தோன்றியாங்கு, என்றும் சான்றோர் . . . . [05]
சான்றோர் பாலர் ஆப,
சாலார் சாலார் பாலர் ஆகுபவே.
பொருளுரை:
பொன், பவளம், முத்து, நிலைபெற்ற பெரிய மலை தரும் விரும்பத்தக்க நீலமணி, ஆகியவை ஒன்றுக்கொன்று தொலைவான இடத்தில் தோன்றினாலும், பெருமதிப்புடைய நல்ல அணிகலன்களில் தொடுக்கும் பொழுது, ஒரே இடத்தில் சேர்ந்திருக்கின்றன. அதைப் போல், எப்பொழுதும் சான்றோர்கள் சான்றோருடன் சேர்வர். சான்றாண்மை இல்லாதவர்கள், சான்றாண்மை இல்லாதவர்களையே சேர்ந்திருப்பர்.
சொற்பொருள்:
பொன்னும் - பொன்னும், துகிரும் - பவளமும், முத்தும் - முத்தும், மன்னிய - நிலைபெற்ற, மா மலை - பெரும் மலை, பயந்த - கொடுத்த, காமரு - விரும்பத்தக்க, மணியும் - நீல மணியும், இடை பட - இடைப்பட்டது, சேய - தொலைவு, ஆயினும் - ஆனாலும், தொடை - தொடுத்தல், புணர்ந்து - சேர்த்து, அரு விலை - விலை மதிப்புமிக்க, நன் கலம் - நல்ல அணிகலன், அமைக்கும் காலை - அமைக்கும் பொழுது, ஒரு வழி - ஓர் இடத்தில், தோன்றியாங்கு - தோன்றினாற்போல், என்றும் - எப்போதும், சான்றோர் சான்றோர் பாலர் ஆப - சான்றோர்கள் சான்றோர்கள் பக்கம் ஆவர், சாலார் - சான்றோர் அல்லாதவர்கள், சாலார் பாலர் ஆகுபவே - சான்றாண்மை அல்லாதவர்கள் பக்கம் ஆவர் (ஆகுபவே - ஏகாரம் அசைநிலை)