புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 215
அல்லற்காலை நில்லான்!
அல்லற்காலை நில்லான்!
பாடியவர் :
கோப்பெருஞ் சோழன்.
திணை :
பாடாண்.
துறை :
இயன்மொழி.
பாடல் பின்னணி:
கோப்பெருஞ்சோழன் வடக்கிருக்கையில் சான்றோர் பலர் அவனைச் சூழ்ந்திருந்தனர். பலர் கூடவே இருந்தாலும் அவனது எண்ணம் பிசிராந்தையார்பால் ஒன்றியிருந்தது. புலவர் பிசிராந்தையார் தன்னைக் காண வருவார் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றான் மன்னன்.
தாதெரு மறுகின் போதொடு பொதுளிய
வேளை வெண் பூ வெண் தயிர்க் கொளீஇ
ஆய் மகள் அட்ட அம் புளி மிதவை
அவரை கொய்யுநர் ஆர மாந்தும், . . . . [05]
தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும்,
பிசிரோன் என்ப, என் உயிர் ஓம்புநனே,
செல்வக் காலை நிற்பினும்,
அல்லல் காலை நில்லலன் மன்னே.
பொருளுரை:
பிளவுபட்ட கதிர்களையுடைய வரகைக் குத்திச் சமைக்கப்பட்ட சோற்றையும், தாதாக உதிர்ந்த எருவுடைய தெருவில் அரும்புகளோடு தழைத்த வேளைச்செடியின் வெண்ணிறப் பூக்களை வெள்ளை நிறமுள்ள தயிரில் இட்டு, ஆயர்மகள் சமைத்த அழகிய புளிக்கூழையும், அவரைக்காயைக் கொய்பவர்கள் நிறைய உண்ணும், தெற்கில் உள்ள பொதிகை மலையையுடைய நல்ல பாண்டிய நாட்டில் உள்ள பிசிர் என்னும் ஊரில் உள்ளவன். அவன் என் உயிரைப் பாதுகாப்பவன். நான் செல்வத்துடன் ஆட்சியில் இருந்த வேளையில் என்னைப் பார்க்காவிட்டாலும், நான் துன்பத்தில் இருக்கும் பொழுது என்னைப் பார்க்காமல் இருக்க மாட்டான்.
சொற்பொருள்:
கவைக் கதிர் வரகின் அவைப்புறு ஆக்கல் - பிளவுபட்ட கதிர்களையுடைய வரகைக் குத்திச் சமைக்கப்பட்ட சோறு, தாதெரு மறுகின் - தாதாக உதிர்ந்த எருவுடைய தெருவில், போதொடு பொதுளிய - மலர்களுடன் தழைத்த, மொட்டுக்களுடன் தழைத்த, வேளை வெண் பூ - வேளையின் வெள்ளை மலர்கள், வெண் தயிர் கொளீஇ - வெள்ளை நிறமுள்ள தயிரில் இட்டு, ஆய் மகள் அட்ட அம் புளி மிதவை - இடைமகள் சமைத்த அழகிய புளிக்கூழ், அவரைக் கொய்யுநர் ஆர மாந்தும் - அவரைக்காயைக் கொய்பவர்கள் நிறைய உண்ணும், தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும் - தெற்கில் பொதிகை மலையையுடைய நல்ல நாட்டிலுள்ளும், பிசிரோன் என்ப - பிசிர் என்னும் ஊரினன் என்று சொல்லுவார்கள், என் உயிர் ஓம்புநனே - என் உயிரைப் பாதுகாப்பவன் (ஓம்புநனே - ஏகாரம் அசைநிலை), செல்வக் காலை நிற்பினும் - நான் செல்வமுடன் ஆண்ட காலத்தில் என்னைப் பார்க்காவிட்டாலும், அல்லல் காலை நில்லலன் - நான் துன்பத்தில் இருக்கும் பொழுது என்னைக் காணாமல் இருக்க மாட்டான், மன் - அசை, ஏ - அசை