புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 212
யாம் உம் கோமான்?
யாம் உம் கோமான்?
பாடியவர் :
பிசிராந்தையார்.
பாடப்பட்டோன் :
கோப்பெருஞ் சோழன்.
திணை :
பாடாண்.
துறை :
இயன்மொழி.
பாடல் பின்னணி:
பாண்டிய நாட்டில் இருந்த புலவர் பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனிடம் மிகுந்த நட்புகொண்டவராக இருந்தார். அவர்களின் நட்பின் காரணமாக மன்னனைத் தன் வேந்தராகவே கருதினார். மன்னனின் சிறப்பை இந்தப் பாடலில் குறிப்பிடுகின்றார்.
களமர்க்கு அரித்த விளையல் வெங்கள்
யாமைப் புழுக்கின் காமம் வீட ஆரா
ஆரல் கொழுஞ் சூடு அம் கவுள் அடாஅ
வைகு தொழின் மடியும் மடியா விழவின் . . . . [05]
யாணர் நல் நாட்டுள்ளும், பாணர்
பைதல் சுற்றத்துப் பசிப் பகை ஆகிக்,
கோழியோனே கோப்பெருஞ்சோழன்,
பொத்தில் நண்பின் பொத்தியொடு கெழீஇ,
வாய் ஆர் பெரு நகை வைகலும் நக்கே . . . . [10]
பொருளுரை:
உன்னுடைய மன்னன் யார் என்று என்னைக் கேட்பீராயின், என்னுடைய மன்னன் உழவர்களுக்காக வடிக்கப்பட்ட விரும்பத்தக்க கள்ளை ஆமையின் அவித்த இறைச்சியுடன் ஆசைதீர அந்த உழவர்கள் உண்டு, சுடப்பட்ட கொழுத்த விலாங்கு மீனின் இறைச்சியைத் தங்கள் கன்னத்தில் அடக்கித் தம்முடைய தொழிலை மறந்து நீங்காத விழாக்களைக் கொண்டாடும் வளமை மிகுந்த சோழ நாட்டின் உறையூரில் உள்ள மன்னன் கோப்பெருஞ்சோழன். அவன் பாணர்களின் வருத்தமடைந்த சுற்றத்தாரின் பசியாகிய பகையைப் போக்குபவன். அவன் குறையில்லாத நண்பரான புலவர் பொத்தியாரோடு கூடி நாள்தோறும் பெருமகிழ்ச்சியுடன் இருக்கின்றான்.
குறிப்பு:
கோழி - உறையூர். யாணர் - புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83). அடாஅ - செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது. அடாஅ - அடக்கி என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது. ஆரா - ஆர்ந்து, செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.
சொற்பொருள்:
நுங்கோ யார் என வினவின் - உன்னுடைய மன்னன் யார் என்று என்னைக் கேட்பீராயின், எங்கோ - என்னுடைய மன்னன், களமர்க்கு - வயலில் பணி புரிபவர்களுக்கு, அரித்த விளையல் வெங்கள் - வடிகட்டிய முதிர்ந்த விரும்பத்தக்க மது, யாமைப் புழுக்கின் - ஆமையின் அவித்த இறைச்சியுடன், காமம் வீட ஆரா - வேட்கைதீர, ஆரல் கொழுஞ் சூடு - விலங்கு மீனின் சுடப்பட்ட கொழுத்த இறைச்சியை, அம் கவுள் அடாஅ - அழகிய கன்னத்தில் அடக்கி (அடாஅ - அளபெடை), வைகு தொழின் மடியும் - இருந்து செய்ய வேண்டிய தொழிலை மறந்து, மடியா விழவின் - நீங்காத விழாக்களையுடைய, யாணர் நல் நாட்டுள்ளும் - வளமை மிகுந்த நாட்டுள்ளும், பாணர் பைதல் சுற்றத்துப் பசிப் பகை ஆகி - பாணரின் வருத்தமுற்ற சுற்றத்தாரின் பசிக்குப் பகையாய், கோழியோனே - உறையூர் என்னும் ஊரில் உள்ளவன், கோப்பெருஞ்சோழன் - கோப்பெருஞ்சோழன் பொத்தில் நண்பின் பொத்தியொடு கெழீஇ - குற்றமில்லாத நட்பினையுடைய பொத்தியார் என்னும் புலவரோடு கூடி (கெழீஇ - அளபெடை), வாய் ஆர் பெரு நகை வைகலும் நக்கே - நாள்தோறும் பெருமகிழ்ச்சியுடன் இருக்கின்றான் (நக்கே - ஏகாரம் அசைநிலை)