புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 195
எல்லாரும் உவப்பது!
எல்லாரும் உவப்பது!
பாடியவர் :
நரிவெரூஉத் தலையார்.
திணை :
பொதுவியல்.
துறை :
பொருண்மொழிக் காஞ்சி
பாடல் பின்னணி:
முதியோராக இருந்தும் தம் அறிவையும் ஆற்றலையும் நல்ல வழியில் பயன்படுத்தாத சிலரை நல்வழிப்படுத்த நரிவெரூஉத்தலையார் இவ்வாறு கூறுகின்றார்.
கயல் முள் அன்ன நரை முதிர் திரை கவுள்
பயன் இல் மூப்பின் பல் சான்றீரே!
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்கும் காலை இரங்குவிர் மாதோ, . . . . [05]
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின், அதுதான்
எல்லாரும் உவப்பது, அன்றியும்
நல் ஆற்றுப்படூஉம் நெறியுமார் அதுவே.
பொருளுரை:
பல நல்ல தன்மைகளை உடைய சான்றோர்களே! பல நல்ல தன்மைகளை உடைய சான்றோர்களே! கெண்டை மீனின் முள் போன்ற நரை முடியுடனும், முதுமையால் ஏற்படும் தோல் சுருக்கம் கொண்ட கன்னத்துடனும், பயன் இல்லாத முதுமையை அடைந்த பல நல்ல தன்மைகளை உடைய சான்றோர்களே! கூர்மையான கோடரிப் படைக்கலன் கொண்டு மிகுதியான வலிமை கொண்ட காலன் கயிற்றால் பிணைத்து இழுத்துச் செல்லும் நேரத்தில் நீங்கள் வருந்துவீர்கள். நல்ல செயல்களைச் செய்யாவிட்டாலும், தீய செயல்கள் செய்வதைத் தவிர்க்கவும். அது தான் எல்லாருக்கும் மகிழ்ச்சி அளிப்பது. அதுமட்டுமல்லாமல், அதுதான் உங்களை நல்ல வழியில் செலுத்தும்.
குறிப்பு:
சான்றீரே - ஒளவை துரைசாமி உரை - இகழ்ச்சிக்குறிப்பு.
சொற்பொருள்:
பல் சான்றீரே - பல நல்ல தன்மைகள் அமைந்த சான்றோர்களே, கயல் முள் - கெண்டை மீன் முள், அன்ன - போல, நரை - நரைத்த முடி, முதிர் - முதிர்ந்த, திரை கவுள் - சுருங்கிய கன்னம், பயன் இல் - பயன் இல்லாத, மூப்பின் - முதுமையின், பல் சான்றீரே - பல நல்ல தன்மைகள் கொண்ட சான்றோர்களே, கணிச்சி - மழு, கோடரி, கூர் - கூர்மையான, படை - படைக் கலன், கடுந் திறல் - மிகுந்த வலிமை, ஒருவன் - ஒருவன் (யமன்), பிணிக்கும் - கயிற்றால் பிணைத்து இழுத்திச் செல்லும், காலை - நேரத்தில், இரங்குவிர் - வருந்துவீர், மாதோ - அசைச்சொல், நல்லது செய்தல் - நன்மை செய்தல், ஆற்றீர் ஆயினும் - நீங்கள் செய்யாவிட்டாலும் கூட, அல்லது செய்தல் - தீமை செய்தல், ஓம்புமின் - தவிருங்கள் (மின் - முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி), அது தான் - அந்தச் செயல் தான், எல்லாரும் - அனைவரும், உவப்பது - மகிழ்வது, அன்றியும் - மட்டுமல்லாமல், நல் ஆற்றுவழிபடூஉம் - நல்ல வழியில் செலுத்தும் (ஆற்றுவழிபடூஉம் - அளபெடை), நெறியுமார் அதுவே - பாதையும் அது தான் (நெறியுமார் - ஆர் அசைநிலை, அதுவே - ஏகாரம் அசைநிலை)