புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 191

நரையில ஆகுதல்!


நரையில ஆகுதல்!

பாடியவர் :

  பிசிராந்தையர்.

திணை :

  பொதுவியல்.

துறை :

  பொருண்மொழிக் காஞ்சி.


பாடல் பின்னணி:

தனக்கு வயதாகியும் நரையின்றி வாழ்வதின் காரணங்களை இப்பாடலில் பிசிராந்தையார் கூறுகின்றார்.

யாண்டு பலவாக, நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின்,
மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர்,
யான் கண்ட அனையர், இளையரும், வேந்தனும்
அல்லவை செய்யான், காக்க அதன்தலை . . . . [05]

ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர், யான் வாழும் ஊரே.

பொருளுரை:

ஆண்டுகள் பல ஆகியும் தலையில் நரை இல்லாதபடி எப்படி இவ்வாறு இருக்கின்றீர்கள் என்று நீங்கள் என்னைக் கேட்டால், சிறந்த என் மனைவியும், அறிவு நிறைந்த பிள்ளைகளும், நான் எண்ணுவது போல் எண்ணும் என்னிடம் பணிபுரிவோரும், தீமைகளைச் செய்யாத மன்னனும், மேலும், பணிவும் அடக்கமும் கொண்ட உயர்ந்த கொள்கைகளின்படி வாழும் சான்றோர்கள் பலரும் நான் வாழும் ஊரில் இருப்பதாலும் தான்.

சொற்பொருள்:

யாண்டு - ஆண்டு, பலவாக - பல ஆகிவிட்டது, நரை - நரை முடி, இல - இல்லாமல், ஆகுதல் - ஆகியதற்கு, யாங்கு - எப்படி, ஆகியர் - ஆனீர்கள், என - என்று, வினவுதிர் - கேட்டீர்கள் (வினவுதிர் - முன்னிலை வினைமுற்று), ஆயின் - ஆனால், மாண்ட - மாட்சிமையுடைய, என் மனைவியோடு - என் மனைவியோடு, மக்களும் - பிள்ளைகளும், நிரம்பினர் - அறிவு நிரம்பினர், யான் கண்ட அனையர் - நான் கருதிய அதனையேக் கருதுபவர்கள், இளையரும் - பணியாட்கள், வேந்தனும் - மன்னனும், அல்லவை - தீயவை, செய்யான் - செய்யாதவன், காக்க - பாதுகாத்து, அதன்தலை - அதற்கு மேல், ஆன்று - நிறைந்து, அவிந்து - பணிந்து, அடங்கிய - அடக்கம் கொண்ட, கொள்கைச் சான்றோர் பலர் - கொள்கையின்படி வாழும் சான்றோர்கள் பலர், யான் வாழும் - நான் வாழும், ஊரே - ஊரில் (ஊரே - ஏகாரம் அசைநிலை)