புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 186

வேந்தர்க்குக் கடனே!


வேந்தர்க்குக் கடனே!

பாடியவர் :

  மோசிகீரனார்.

திணை :

  பொதுவியல்.

துறை :

  பொருண்மொழிக் காஞ்சி.


பாடல் பின்னணி:

இவ்வுலகிற்கு மன்னன் இன்றியமையாதவன் என்பதை அறிந்து நடப்பது மன்னனின் கடமை என்று இப்பாடலில் புலவர் மோசிகீரனார் வலியுறுத்துகின்றார்.

நெல்லும் உயிர் அன்றே, நீரும் உயிர் அன்றே,
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்,
அதனால், யான் உயிர் என்பது அறிகை,
வேல் மிகு தானை வேந்தற்குக் கடனே.

பொருளுரை:

நெல்லும் உயிர் இல்லை. நீரும் உயிர் இல்லை. இந்த பரந்த உலகம் மன்னனையே உயிராகக் கொண்டது. அதனால், தான் உயிர் என்பதை அறிவது வேல்களுடன் கூடிய படைகளைக் கொண்ட வேந்தனின் கடமை.

சொற்பொருள்:

நெல்லும் - நெல்லும், உயிர் அன்றே - உயிர் இல்லை (அன்றே - ஏகாரம் அசைநிலை), நீரும் - நீரும், உயிர் அன்றே - உயிர் இல்லை, மன்னன் உயிர்த்தே - மன்னனே உயிர் (உயிர்த்தே - ஏகாரம் அசைநிலை), மலர்தலை - பரந்த இடம், உலகம் - உலகம், அதனால் - அதனால், யான் உயிர் என்பது - தான் உயிர் என்பது, அறிகை - அறிவது, வேல் மிகு - வேல் மிகுந்த, தானை - படை, வேந்தற்கு - மன்னனுக்கு, கடனே - கடமை (ஏகாரம் அசைநிலை)