புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 185
ஆறு இனிது படுமே!
ஆறு இனிது படுமே!
பாடியவர் :
தொண்டைமான் இளந்திரையன்.
திணை :
பொதுவியல்.
துறை :
பொருண்மொழிக் காஞ்சி.
பாடல் பின்னணி:
தொண்டைமான் இளந்திரையன் தொண்டை நாட்டை ஆண்ட குறுநில மன்னன். அவன் ஆட்சியாளர்களின் ஆட்சி செய்யும் முறையை விளக்குகின்றான் இந்தப் பாடலில்.
காவல் சாகாடு உகைப்போன் மாணின்
ஊறு இன்றாகி ஆறு இனிதுபடுமே,
உய்த்தல் தேற்றான் ஆயின், வைகலும்
பகைக் கூழ் அள்ளல் பட்டு, 5
மிகப் பல் தீ நோய் தலைத்தலைத் தருமே.
பொருளுரை:
சக்கரத்தையும் நெடுஞ்சட்டத்தையும் இணைத்து இயங்கும் வண்டியைப் போன்றது இவ்வுலகம். வண்டியை ஓட்டுபவன் திறமை உடையவனாக இருந்தால், அது இடையூறு இல்லாமல் செம்மையாகச் செல்லும். அவன் திறமை இல்லாதவனாக இருந்தால் வண்டி சேற்றில் சிக்கிக் கொள்ளும். அது போல் மாண்பு உடையவனாக மன்னன் இருந்தால் நாடு நலம் பெரும். மன்னன் தெளிவு இல்லாதவனாக இருந்தால், பகை என்னும் செறிந்த சேற்றில் நாடு மூழ்கி ஒவ்வொரு நாளும் பல துன்பங்களை அடையும்.
சொற்பொருள்:
கால் - வண்டியின் சக்கரம், பார் - வண்டியின் அடி மரம், நெடுஞ்சட்டம், கோத்து - இணைத்து, ஞாலத்து - உலகத்தை, இயக்கும் - இயங்கச்செய்யும், காவல் - பாதுகாப்பாக, சாகாடு - வண்டி, உகைப்போன் - செலுத்துபவன், மாணின் - மாண்பு உடையவன் ஆக இருந்தால், ஊறு - துன்பம், இன்றாகி - இல்லாமல் போய், ஆறு - வழி, இனிதுபடுமே - இனிமையாக அமையும் (இனிதுபடுமே - ஏகாரம் அசைநிலை), உய்த்தல் - சேர்க்கும் வழி, தேற்றான் - அறியாதவன், ஆயின் - ஆனால், வைகலும் - நாள்தோறும், பகைக்கூழ் அள்ளல் பட்டு - பகை என்னும் செறிந்த சேற்றில் பட்டு, மிகப் பல் - மிகுந்த பல, தீ நோய் - தீய துன்ப நோய்களை, தலைத்தலை - மேன்மேலும், தருமே - தரும் (ஏகாரம் அசைநிலை)