புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 181

இன்னே சென்மதி!


இன்னே சென்மதி!

பாடியவர் :

  சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்.

பாடப்பட்டோன் :

  வல்லார் கிழான் பண்ணன்.

திணை :

  வாகை.

துறை :

  வல்லாண் முல்லை.


பாடல் பின்னணி:

வறுமையில் வாடும் பாணன் ஒருவனை புலவர் சிறுகருந்தும்பியார் வல்லார் கிழான் பண்ணனிடத்து ஆற்றுப்படுத்துவது.

மன்ற விளவின் மனை வீழ் வெள்ளில்,
கருங்கண் எயிற்றி காதல் மகனொடு
கான இரும் பிடிக் கன்று தலைக்கொள்ளும்,
பெருங்குறும்பு உடுத்த, வன்புல இருக்கைப்,
புலாஅ அம்பின், போர் அருங்கடி மிளை . . . . [05]

வலாஅரோனே, வாய்வாள் பண்ணன்,
உண்ணா வறுங்கடும்பு உய்தல் வேண்டின்,
இன்னே சென்மதி நீயே, சென்று அவன்
பகைப்புலம் படரா அளவை, நின்
பசிப் பகைப் பரிசில் காட்டினை கொளற்கே . . . . [10]

பொருளுரை:

பொது மன்றத்தில் உள்ள விளாமரத்திலிருந்து அருகில் இருந்த இல்லத்தின் முற்றத்தில் விழுந்த விளாம்பழம் ஒன்றை கரிய கண்களையுடைய மறக்குடிப் பெண் ஒருத்தியின் அன்பிற்குரிய மகனுடன் காட்டில் வாழும் பெண் யானையின் கன்றும் பழத்தை எடுக்கச் செல்லும், பெரிய அரண்கள் சூழ்ந்த, வலிய நிலத்தின்கண் உள்ள ஊர் வல்லார். புலால் நாறும் அம்புகளையும், போர் செய்வதற்கு அரிய காவற்காடும் உடைய அந்த ஊரிடத்து, குறி தப்பாத வாளையுடைய பண்ணன் இருக்கின்றான். வறுமையுற்ற உன் சுற்றம் பிழைக்க வேண்டுமானால், உடனேயே நீ அவனிடம் செல்லுவாயாக. அவன் போருக்குச் செல்வதற்கு முன்பே சென்று, உன் பசிக்குப் பகையாகிய பரிசிலைப் பெற்றுக் கொள்வாயாக.

குறிப்பு:

மதி - மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26).

சொற்பொருள்:

மன்ற விளவின் - மன்றத்தில் உள்ள விளாமரத்திலிருந்து, மனை வீழ் வெள்ளில் - அங்கு இருந்த இல்லத்தின் முற்றத்தில் விழுந்த விளாம்பழம், கருங்கண் எயிற்றி - கரிய கண்களையுடைய மறக்குடிப் பெண், காதல் மகனொடு - அன்பிற்குரிய மகனுடன், கான இரும் பிடிக் கன்று தலைக்கொள்ளும் - காட்டில் வாழும் பெண் யானையின் கன்றும் பழத்தை எடுக்க அவனுடன் செல்லும், பெருங்குறும்பு உடுத்த - பெரிய அரண்கள் சூழ்ந்த, வன்புல இருக்கை - வலிய நிலத்தின்கண் உள்ள ஊர், புலாஅ அம்பின் - புலால் நாறும் அம்புகளையும், போர் அருங்கடி மிளை - போர் செய்வதற்கு அரிய காவற்காடு, வலாஅரோனே - வல்லார் என்ற ஊரிடத்து இருப்போன் (இசைநிறை அளவெடை, ஏகாரம் அசைநிலை), வாய்வாள் பண்ணன் - குறி தப்பாத வாளையுடைய பண்ணன், உண்ணா வறுங்கடும்பு உய்தல் வேண்டின் - வறுமையுற்ற உன் சுற்றம் பிழைக்க வேண்டுமானால், இன்னே சென்மதி நீயே - உடனேயே செல்லுவாயாக நீ (மதி - முன்னிலையசை), சென்று - சென்று, அவன் பகைப்புலம் படரா அளவை - அவன் போருக்குச் செல்வதற்கு முன்பு, நின் பசிப் பகைப் பரிசில் காட்டினை கொளற்கே - உன் பசிக்குப் பகையாகிய பரிசிலைப் பெற்றுக் கொள்வாயாக (கொளற்கே - ஏகாரம் அசைநிலை)