புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 178

இன்சாயலன் ஏமமாவான்!


இன்சாயலன் ஏமமாவான்!

பாடியவர் :

  ஆவூர் மூலங்கிழார்.

பாடப்பட்டோன் :

  பாண்டியன் கீரஞ்சாத்தன் பாண்டிக் குதிரைச் சாக்கையன் எனவும் பாடம்.

திணை :

  வாகை.

துறை :

  வல்லாண் முல்லை.

கந்துமுனிந்து உயிர்க்கும்யானையொடு, பணைமுனிந்து,
கால்இயற் புரவி ஆலும் ஆங்கண்,
மணல்மலி முற்றம் புக்க சான்றோர்
உண்ணார் ஆயினும், தன்னொடு சூளுற்று
உண்மென இரக்கும் பெரும்பெயர்ச் சாத்தன் . . . . [05]

ஈண்டோர் இன்சா யலனே; வேண்டார்
எறிபடை மயங்கிய வெருவரு ஞாட்பின்,
கள்ளுடைக் கலத்தர் உள்ளூர்க் கூறிய
நெடுமொழி மறந்த சிறுபே ராளர்
அஞ்சி நீங்கும் காலை, . . . . [10]

ஏம மாகத் தான்முந் துறுமே.

பொருளுரை:

பாண்டியன் கீரஞ்சாத்தன் பாடலில் ‘பெரும்பெயர்ச் சாத்தன்’ எனக் கூறப்படுகிறான். யானையைக் கட்டிவைக்கும் மரத்தைக் ‘கந்து’ என்றும், குதிரையைக் கட்டிவைக்கும் மரத்தைப் ‘பணை’ என்றும் கூறுவது தமிழ்மரபு. மணல் பரப்பப்பட்டிருக்கும் அவனது வீட்டு முற்றத்தில் யானைகளும் குதிரைகளும் கட்டிக்கிடப்பதை விரும்பாமல் ஆடிக்கொண்டேயிருக்குமாம். அவனது முற்றத்துக்குச் செல்பவர் யாராயிருந்தாலும் ‘பசி இல்லை, வேண்டாம்’ என்று உண்ண மறுத்தால், “என்மீது ஆணை, உண்ணத்தான் வேண்டும்” என்று கெஞ்சுவானாம். அதனால், ‘சாத்தன்’ என்று சொன்னால் இவனைமட்டுமே குறிக்கும் அளவுக்கு இவன் ‘பெரும்பெயர்’ பெற்றிருந்தான். இல்லத்தில் இப்படி இனிமையாக இருப்பவன் போர்க்களம் சென்றால் பகைவரைத் தாக்க முந்திக்கொள்கிறான். கள்ளுண்ட மயக்கத்தில் தம் படையினர் எதிராளிகளைக் கண்டு அஞ்சி நீங்கும் காலத்தில் இவன் அவர்களுக்குப் பாதுகாவல் அரணாக நிற்கிறான்.