புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 162
இரவலர்அளித்த பரிசில்!
இரவலர்அளித்த பரிசில்!
பாடியவர் :
பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன் :
இளவெளிமான்.
திணை :
பாடாண்.
துறை :
பரிசில் விடை.
பாடல் பின்னணி:
வெளிமான் என்பவர் ஒரு கொடை வள்ளல். அவருடைய தம்பியான இளவெளிமான் அவரைப் போன்று ஈகைத் தன்மையுடையவர் இல்லை. அவன் கொடுத்ததை ஏற்காத புலவர் பெருஞ்சித்திரனார், குமணனிடம் சென்று பரிசில் பெற்று வந்து இளவெளிமானிடம் இவ்வாறு கூறுகின்றார்.
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்,
இரவலர் உண்மையும் காண் இனி, இரவலர்க்கு
ஈவோர் உண்மையும் காண் இனி, நின் ஊர்க்
கடி மரம் வருந்தத் தந்து யாம் பிணித்த . . . . [05]
நெடு நல் யானை எம் பரிசில்,
கடுமான் தோன்றல், செல்வல் யானே.
பொருளுரை:
இரப்போர்க்குப் பொருள் கொடுத்துப் பாதுகாப்பவன் அல்ல நீ! இரப்போர்க்குப் பொருள் கொடுத்து உதவும் புரவலர்கள் இல்லாமல் இல்லை! இனி இரவலர் உண்மையை நீ காண்! இரப்போர்க்குப் பொருள் கொடுத்து உதவும் புரவலர்களின் உண்மையையும் இனி நீ காண்! உன் ஊரில் உள்ள உன்னுடைய காவல் மரம் வருந்துமாறு நான் கட்டிய உயர்ந்த நல்ல யானை உனக்கு நான் தரும் பரிசு, விரைந்து செல்லும் குதிரைகளையுடைய தலைவனே, நான் செல்கின்றேன்.
சொற்பொருள்:
இரவலர் புரவலை நீயும் அல்லை - இரப்போர்க்கு கொடுத்து பாதுகாப்பவை அல்ல நீ, புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர் - இரப்போர்க்கு பொருள் கொடுத்து உதவும் புரவலர்கள் இல்லாமல் இல்லை, இரவலர் உண்மையும் காண் இனி - இனி இரவலர் உண்மையை நீ காண், இரவலர்க்கு ஈவோர் உண்மையும் காண் இனி - இரப்போர்க்கு பொருள் கொடுத்து உதவும் புரவலர்களின் உண்மையையும் நீ காண், நின் ஊர்க் கடி மரம் வருந்தத் தந்து யாம் பிணித்த - உன் ஊரில் உள்ள உன்னுடைய காவல் மரம் வருந்துமாறு நான் கட்டிய, நெடு நல் யானை - உயர்ந்த நல்ல யானை, எம் பரிசில் - என்னுடைய பரிசு, கடுமான் தோன்றல் - விரைந்துச் செல்லும் குதிரைகளையுடைய தலைவனே, செல்வல் யானே - நான் செல்லுகின்றேன் (யானே - ஏகாரம் அசைநிலை)