புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 149
வண்மையான் மறந்தனர்!
வண்மையான் மறந்தனர்!
பாடியவர் :
வன்பரணர்.
பாடப்பட்டோன் :
கண்டீரக் கோப்பெருநள்ளி.
திணை :
பாடாண்.
துறை :
இயன் மொழி.
பாடல் பின்னணி:
நள்ளியிடம் பரிசில் பெற்று, விருந்துண்டு மகிழ்ந்த பாணர்கள் அன்றைய மாலைப் பொழுதில், யாழை இசைத்துப் பாடி அனைவரையும் மகிழ்வித்தனர். அப்போது அவர்கள் காலையில் பாட வேண்டிய மருதப் பண்ணை மாலையிலும், மாலையில் பாட வேண்டிய செவ்வழிப் பண்ணைக் காலையிலும் பாடினர். அது குறித்து வன்பரணரிடம் நள்ளி வியப்புடன் வினவ, அதன் காரணத்தை விளக்கி வன்பரணர் இயற்றிய பாடல் இது.
மாலை மருதம் பண்ணிக், காலைக்
கைவழி மருங்கில் செவ்வழி பண்ணி,
வரவு எமர் மறந்தனர், அது நீ
புரவுக் கடன் பூண்ட வண்மையானே . . . . [05]
பொருளுரை:
நள்ளி! நீ வாழ்க! கொடுப்பதைக் கடமையாக மேற்கொண்டு நீ அளித்த கொடையால் ஏற்பட்ட வளத்தால், இருள் சூழ்ந்த மாலைப் பொழுதில் மருதப் பண்ணை இசைத்தும், காலைப் பொழுதில் கையின் வழியாக யாழ் கொண்டு செவ்வழிப் பண்ணை இசைத்தும், இசை மரபு முறையை எம் பாணர்கள் மறந்துவிட்டனர்.
குறிப்பு:
கைவழி (3) - ஒளவை துரைசாமி உரை - கையகத்து எப்பொழுதும் இருத்தலால் யாழைக் கைவழி என்றார், ஆகுபெயரால்.
சொற்பொருள்:
நள்ளி - கோப்பெரு நள்ளி, வாழியோ - வாழ்க (ஓகாரம் அசைநிலை), நள்ளி - நள்ளி, நள்ளென் - இருள் சூழ்ந்த, மாலை - மாலைப் பொழுது, மருதம் பண்ணி - மருதப் பண் இசைத்து, காலை - காலைப் பொழுது, கைவழி மருங்கில் - கையின் வழியாக யாழ் கொண்டு, செவ்வழி பண்ணி - செவ்வழிப் பண் இசைத்து, வரவு - மரபு முறை, எமர் - எம்மவர், பாணர்கள், மறந்தனர் - மறந்துவிட்டனர், அது - அதன் காரணம், நீ - நீ, புரவுக் கடன் - கொடுப்பதைக் கடமையாக, பூண்ட - மேற்கொண்ட, வண்மையானே - கொடைத் தன்மையால் (ஏகாரம் அசைநிலை)