புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 148
என் சிறு செந்நா!
என் சிறு செந்நா!
பாடியவர் :
வன்பரணர்.
பாடப்பட்டோன் :
கண்டீரக் கோப் பெருநள்ளி.
திணை :
பாடாண்.
துறை :
பரிசில்.
பாடல் பின்னணி:
கடையெழு வள்ளல்களுள் ஒருவன் கண்டீரக் கோப்பெருநள்ளி. ஒருமுறை புலவர் வன்பரணர் நள்ளியிடம் சென்று அவனது கொடைத் தன்மையைப் பாராட்ட, அத்தகைய பாராட்டிற்குத் தான் தகுதி படைத்தவனோ என நள்ளி ஐயமுற்றான். அவனது ஐயத்திற்குப் பதிலளிக்க வன்பரணர் இயற்றிய பாடல் இது.
அசைவு இல் நோந்தாள் நசை வளன் ஏத்தி
நாடொறும் நன்கலம் களிற்றொடு கொணர்ந்து
கூடு விளங்கு வியன் நகர்ப் பரிசில் முற்று அளிப்பப்,
பீடு இல் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச் . . . . [05]
செய்யா கூறிக் கிளத்தல்,
எய்யாதாகின்று எம் சிறு செந்நாவே.
பொருளுரை:
பெரும் ஒலியுடன் மேலிருந்து ஆர்ப்பரித்து விழும் அருவிகளையுடைய மலையை ஆளும் நள்ளி! உன் தளர்வு இல்லாத வலிமையான முயற்சியால் திரட்டிய விரும்பத்தக்க செல்வத்தை வாழ்த்தி, நாள்தோறும் நல்ல அணிகலன்களை யானையோடு கொண்டு வந்து நெற்குதிர்கள் நிறைந்து விளங்கும் பெரிய நகரில் பரிசாக முழுவதையும் அளிக்கின்றாய். பெருமை இல்லாத மன்னர்களைப் புகழ்வதற்கு வேண்டி, அவர்கள் செய்யாதவற்றை வியந்து கூறுவதை அறியாது, என்னுடைய சிறிய நேர்மையான நாக்கு.
சொற்பொருள்:
கறங்கு - ஒலி, மிசை - மேல், அருவிய - அருவியை உடைய, பிறங்கு மலை - உயர்ந்த மலை, ஒளியுடைய மலை, நள்ளி - நள்ளி, நின் - உன், அசைவு இல் - தளர்வு இல்லாத, நோந்தாள் - வலிமையான முயற்சி, நசை - விருப்பம், வளன் - செல்வம், ஏத்தி - புகழ்ந்து, நாடொறும் - நாள்தோறும், நன்கலம் - நல்ல அணிகலன், களிற்றொடு - யானையோடு, கொணர்ந்து - கொண்டு வந்து, கூடு - நெற்குதிர், விளங்கு - விளங்கும், வியன் நகர் - பெரிய ஊர், பெரிய இல்லம், பரிசில் முற்று அளிப்ப - பரிசாக முழுவதையும் அளிப்பதால், பீடு இல் - பெருமை இல்லாத, மன்னர் - மன்னர்களை, புகழ்ச்சி - புகழ்வதற்கு, வேண்டி - வேண்டி, செய்யா - செய்யாதவற்றை, கூறி - கூறி, கிளத்தல் - பேசுதல், எய்யாதாகின்று - அறியாததாக ஆயிற்று, எம் - என் (எம் - தன்மைப் பன்மை), சிறு - சிறிய, செந்நாவே - நேர்மையான நாக்கு (செந்நாவே - ஏகாரம் அசைநிலை)