புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 147

எம் பரிசில்!


எம் பரிசில்!

பாடியவர் :

  பெருங்குன்றூர் கிழார்.

பாடப்பட்டோன் :

  வையாவிக் கோப்பெரும் பேகன்.

திணை :

  பெருந்திணை.

துறை :

  குறுங்கலி, தாபத நிலை.


பாடல் பின்னணி:

பெருங்குன்றூர் கிழார் பேகனை மனைவியிடம் செல்லுமாறு வேண்டுகின்றார் இப்பாடலில்.

கல் முழை அருவிப் பன் மலை நீந்திச்,
சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததைக்
கார் வான் இன் உறை தமியள் கேளா,
நெருநல் ஒரு சிறைப் புலம்பு கொண்டு உறையும்
அரி மதர் மழைக் கண் அம் மா அரிவை . . . . [05]

நெய்யொடு துறந்த மை இருங்கூந்தல்
மண்ணுறு மணியின் மாசு அற மண்ணிப்,
புது மலர் கஞல இன்று பெயரின்,
அது மன் எம் பரிசில் ஆவியர் கோவே.

பொருளுரை:

மலைக் குகைகளிருந்து வடியும் அருவிகளையுடைய பல மலைகளைக் கடந்து, என்னுடைய சிறிய யாழில் செவ்வழி என்னும் பண்ணை இசைக்கும்படி பண்ணி நான் வந்ததற்கு, கார்காலத்தின் மழையினது இனிய துளி விழும் ஓசையை நேற்று ஒரு பக்கத்தில் தனிமையில் கேட்டு இருந்த, அரி படர்ந்த குளிர்ச்சியுடைய கண்களையுடைய அழகிய மாமை நிறத்தினையுடைய உன்னுடைய இளைய மனைவி, அவளுடைய நெய்யால் துறக்கப்பட்ட மைபோலும் கரிய கூந்தலை நீலமணியைப் போன்று மாசு இல்லாமல் கழுவி, அதில் புதிய மலர்கள் அணியும்படி, இன்று அவளிடம் செல்வாயாயின், அதுவே நீ எமக்கு அளிக்கும் பரிசு, ஆவியர் குடியின் வேந்தே!

குறிப்பு:

கேளா - கேட்டு என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது. உறை - துளி, ஆகுபெயரால் துளி ஓசை.

சொற்பொருள்:

கல் முழை அருவிப் பன் மலை நீந்தி - மலைக் குகைகளிருந்து வடியும் அருவிகளையுடைய பல மலைகளைக் கடந்து, சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததை - என்னுடைய சிறிய யாழில் செவ்வழி என்னும் பண்ணை இசைக்கும்படி பண்ணி நான் வந்ததற்கு, கார் வான் இன் உறை தமியள் கேளா நெருநல் ஒரு சிறைப் புலம்பு கொண்டு உறையும் - கார்காலத்தின் மழையினது இனிய துளி விழும் ஓசையை நேற்று ஒரு பக்கத்தில் தனிமையில் கேட்டு இருந்த (உறை - துளி, ஆகுபெயரால் துளியோசை), அரி மதர் மழைக் கண் அம் மா அரிவை - அரி படர்ந்த குளிர்ச்சியுடைய கண்களையுடைய அழகிய மாமை நிறத்தினையுடைய உன்னுடைய இளைய மனைவி, நெய்யொடு துறந்த மை இருங்கூந்தல் - அவளுடைய நெய்யால் துறக்கப்பட்ட மைபோலும் கரிய கூந்தலை, மண்ணுறு மணியின் மாசு அற மண்ணி - நீலமணியைப் போன்று மாசு இல்லாமல் கழுவி (மணியின் - இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), புது மலர் கஞல - அதில் புதிய மலர்கள் அணியும்படி, இன்று பெயரின்- இன்று அவளிடம் செல்வாயாயின், அது மன் எம் பரிசில் ஆவியர் கோவே - அதுவே நீ எமக்கு அளிக்கும் பரிசு, ஆவியர் குடியின் வேந்தே (மன் - அசை, கோவே - ஏகாரம் அசைநிலை)