புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 145

அவள் இடர் களைவாய்!


அவள் இடர் களைவாய்!

பாடியவர் :

  கபிலர்.

பாடப்பட்டோன் :

  வையாவிக் கோப்பெரும் பேகன்.

திணை :

  பெருந்திணை.

துறை :

  குறுங்கலி. 'பரணர் பாட்டு' எனவும் கொள்வர்.


பாடல் பின்னணி:

கடையெழு வள்ளல்களுள் ஒருவனான பேகன் வேறு ஒரு பெண்ணிடம் உறவு கொண்டதால் தன் மனைவியைப் பிரிந்திருந்தான். அந்த நேரத்தில் பரணர் பேகனிடம் சென்று பாடினார். அவருக்குப் பேகன் பரிசில் அளிக்க முன்வந்தான். அதைக் கண்ட பரணர், “நான் பசியால் இங்கு வரவில்லை. எனக்குப் பாரமும் கிடையாது. நான் வேண்டும் பரிசு, நீ இன்று இரவே சென்று உன் மனைவியின் துயரத்தைத் தீர்ப்பது தான்” என்று கூறுகின்றார்.

மடத்தகை மாமயில் பனிக்கும் என்று அருளிப்
படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக!
பசித்தும் வாரோம், பாரமும் இலமே,
களங்கனியன்ன கருங்கோட்டுச் சீறியாழ் . . . . [05]

நயம் புரிந்து உறையுநர் நடுங்கப் பண்ணி,
அறம் செய்தீமோ, அருள் வெய்யோய் என
இஃது யாம் இரந்த பரிசில் அஃது, இருளின்
இன மணி நெடுந்தேர் ஏறி
இன்னாது உறைவி அரும் படர் களைமே . . . . [10]

பொருளுரை:

மென்மையான தகைமையும், கருமை நிறமும் உள்ள மயில் குளிரால் நடுங்குவதாக எண்ணி அருள் செய்து அதற்குப் போர்வையைக் கொடுத்து அழியாத நல்ல புகழைப் பெற்ற, மதம் கொண்ட யானைகளையும் செருக்குடைய குதிரைகளையும் கொண்ட பேகனே! நான் பசியுடன் வரவில்லை. சுற்றத்தாரைக் காக்கும் பாரமும் எனக்குக் கிடையாது. களாப்பழம் போன்ற கரிய நிறத் தண்டை உடைய சிறிய யாழின் இசை நயம் தெரிந்தோர், தலையசைத்துக் கேட்குமாறு ‘அறம் செய்க, அருளை விரும்புபவனே!' எனப் பாடி உன்னிடம் நான் கேட்பது என்னவென்றால், இந்த இரவிலேயே நிறைந்த மணிகளுடைய பெரிய தேரில் நீ ஏறிச் சென்று, துயரத்துடன் வாழும் உன் மனைவியின் பெரும் துன்பத்தைக் களைய வேண்டும் என்பது தான்.

குறிப்பு:

படாஅம் - அளபெடை, கெடாஅ - அளபெடை, கடாஅ - அளபெடை, வாரேம் - தன்மைப் பன்மை, இலமே - தன்மைப் பன்மை, யாம் - தன்மைப் பன்மை, களைமே - முன்னிலை எதிர்மறை முற்றுவினைத் திரிசொல்.

சொற்பொருள்:

மடத் தகை - மென்மையான தகைமை, மா மயில் - கருமை நிற மயில், பனிக்கும் - குளிரால் நடுங்கும், என்று - என்று எண்ணி, அருளி - அருள் செய்து, படாஅம் - போர்வை (அளபெடை), ஈத்த - கொடுத்த, கெடாஅ - கெடாத (அளபெடை), நல் இசை - நல்ல புகழ், கடாஅ - மதம் கொண்ட, யானை - யானை, கலி - செருக்கு, மான் - குதிரை, பேக - பேகனே, பசித்தும் - பசியுடன், வாரோம் - யாம் வரவில்லை (தன்மைப் பன்மை), பாரமும் - சுமையும், இலமே - யாம் இல்லை (தன்மைப் பன்மை), களங்கனி - களாப்பழம், அன்ன - போன்ற, கருங்கோட்டு - கரிய நிறத்துத் தண்டை உடைய, சீறியாழ் - சிறிய யாழை, நயம் - இசையின் தன்மை, புரிந்து - தெரிந்து, உறையுநர் - வாழ்வோர், நடுங்கப் பண்ணி - தலையை அசைத்துக் கொண்டாடும்படி, அறம் செய்தீமோ - அறத்தை செய்வாயாக (தீ, மோ - முன்னிலையசைகள்), அருள் வெய்யோய் - அருளை விரும்புபவனே, என - என்று, இஃது யாம் - இது யாம் (தன்மைப் பன்மை), இரந்த - வேண்டும், பரிசில் - பரிசு, அஃது - அது, இருளின் - இரவில், இனமணி - நிறைய மணியை உடைய, நெடுந்தேர் - பெரிய தேர், ஏறி - ஏறி, இன்னாது - துன்பத்தில், உறைவி - உறைபவள், மனைவி, அரும் படர் - பெரும் துன்பம், களைமே - களைவாயாக (களைமே - முன்னிலை எதிர்மறை முற்றுவினைத் திரிசொல்)