புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 141
மறுமை நோக்கின்று!
மறுமை நோக்கின்று!
பாடியவர் :
பரணர்.
பாடப்பட்டோன் :
வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை :
பாடாண்.
துறை :
பாணாற்று படை; புலவராற்றுப் படையும் ஆம்.
மாணிழை விறலி மாலையொடு விளங்கக்,
கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட்டு அசைஇ,
ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர்!
யாரீ ரோ? என வனவல் ஆனாக், . . . . [05]
காரென் ஒக்கல், கடும் பசி, இரவல!
வென்வேல் அண்ணல் காணா ஊங்கே,
நின்னினும் புல்லியேம் மன்னே; இனியே,
இன்னேம் ஆயினேம் மன்னே; என்றும்
உடாஅ, போரா ஆகுதல் அறிந்தும் . . . . [10]
படா அம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ,
கடாஅ யானைக் கலிமான் பேகன்,
எத்துணை ஆயினும் ஈதல் நன்று என
மறுமை நோக்கின்றோ அன்றே,
பிறர், வறுமை நோக்கின்று, அவன் கைவண்மையே . . . . [15]
பொருளுரை:
பே என்னும் சொல் மழைமேகத்தை உணர்த்தும். மழைமேகம் போன்றவன் என்னும் பொருளில் பேகன் என்னும் பெயர் உருவாகியுள்ளது. வறுமையில் வாடும் பாணன் ஒருவனைப் பேகனிடம் பரிசில் பெற்றுவந்த பாணன் பேகனிடம் செல்லும்படி ஆற்றுப்படுத்துகிறான். பாணன் பொன்னால் செய்த தாமரையும், அவன் மனைவி விறலி விலை உயர்ந்த அணிகலன்களையும் மாலையையும் அணிந்து கொண்டிருந்தான். அவர்கள் தாம் ஊர்ந்துவந்த தேரிலிருந்த குதிரைகளை அவிழ்ந்து விட்டுவிட்டு இளைப்பாறிக்கொண்டிருந்தனர். அந்தப் பாணன் சொல்கிறான். “ஊருக்குச் செல்பவர் போல வழியில் உள்ள காட்டில் காணப்படுகிறீரே, நீவிர் யார்” என வினவுகிறாய். சொல்கிறேன் கேள். மேகக்கூட்டம் போன்ற சுற்றத்தாருடன், கடுமையான பசியுடன் காணப்படுகிறாய். வெற்றிவேல் அண்ணல் பேகனைக் காண்பதற்கு முன்னர் நானும் உன்னைக் காட்டிலும் கேடாக இருந்தேன். மயில் உடுத்திக்கொள்ளாது, போர்த்திக்கொள்ளாது எனத் தெரிந்திருந்தும், தான் குளிரில் நடுங்கும்போது போர்த்தியிருந்த மேலாடையை ஆடும் மயிலுக்குக் குளிரில் அது நடுங்குவதாக எண்ணிப் போர்த்திவிட்டவன் எமக்கு இப் பரிசில்களை வழங்கிய எம் அரசன். அவன் யானைக்கடா மீது உலவும் பேகன். சிறிதோ, பெரிதோ, எந்த அளவாயினும் ஈதல்தான் பெரிது எனச் செயல்படுபவன். அவன் பிறரது வறுமை நிலைமையைப் பார்த்து அதனைப் போக்கும் அளவுக்கு வழங்குவான்.