புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 139
சாதல் அஞ்சாய் நீயே!
சாதல் அஞ்சாய் நீயே!
பாடியவர் :
மருதன் இளநாகனார்.
பாடப்பட்டோன் :
நாஞ்சில் வள்ளுவன்.
திணை :
பாடாண்.
துறை :
பரிசில் கடாநிலை.
பாடல் பின்னணி:
நாஞ்சில் வள்ளுவன் சேர மன்னனுக்குக் கீழ் இருந்த குறுநில மன்னன். குறுநில மன்னர்களில் சிலர் மூவேந்தர்களுக்கு அடியில் இருந்துள்ளனர். அவர்களுடைய ஆதரவையும் பெற்றுள்ளனர். புலவர் மருதன் இளநாகனார் நாஞ்சில் வள்ளுவனிடம் பரிசில் வேண்டிச் சென்றார்.
சில் ஓதிப் பல் இளைஞருமே,
அடி வருந்த நெடிது ஏறிய
கொடி மருங்குல் விறலியருமே,
வாழ்தல் வேண்டிப் . . . . [05]
பொய் கூறேன், மெய் கூறுவல்,
ஓடாப் பூட்கை உரவோர் மருக,
உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந,
மாயா உள்ளமொடு, பரிசில் துன்னிக்
கனி பதம் பார்க்கும் காலையன்றே, . . . . [10]
ஈதல் ஆனான் வேந்தே, வேந்தற்குச்
சாதல் அஞ்சாய் நீயே, ஆயிடை,
இரு நிலம் மிளிர்ந்திசினாஅங்கு ஒரு நாள்
அருஞ்சமம் வருகுவதாயின்,
வருந்தலும் உண்டு, என் பைதலம் கடும்பே . . . . [15]
பொருளுரை:
தோளில் அழுந்தியதால் பல காயங்களுடைய சிலவாகிய மயிரையுடைய என்னுடைய பல இளைஞர்களும், தங்கள் காலடி வருந்த நீண்ட பொழுது மலையில் ஏறிய விறலியரும், வாழ்தலை விரும்பி நான் பொய்யைக் கூற மாட்டேன். மெய்யைக் கூறுவேன். புறமுதுகிட்டு ஓடாத வலியர்களின் வழித் தோன்றலே! உயர்ந்த உச்சியையுடைய உழாத நாஞ்சில் மலையின் தலைவனே! பரிசுக்கான பொருத்தமான வேளை இது என்று நீ எண்ணும் காலம் இது இல்லை. உனக்கு விடாது தருகின்றான் உன் சேர மன்னன். அவனுக்காகச் சாவதற்கு அஞ்சாதவன் நீ. அவ்விடத்தில், பெரிய நிலம் பிறழ்ந்தாற் போல், ஒரு நாள் அரிய போர் வருவதானால், என் சுற்றத்தார் வருந்துவதுவார்கள்.
குறிப்பு:
உழாஅ நாஞ்சில் (8) - உழுகின்ற கலப்பையின் பெயரையுடைய, நாஞ்சில் மலை, நாஞ்சில் மலைக்கு வெளிப்படை.
சொற்பொருள்:
சுவல் அழுந்தப் பல காய - தோளில் அழுந்தியதால் பல காயங்களுடைய, சில் ஓதிப் பல் இளைஞருமே - சிலவாகிய மயிரையுடைய பல இளைஞர்களும் (இளைஞருமே - ஏகாரம் அசைநிலை), அடி வருந்த நெடிது ஏறிய கொடி மருங்குல் விறலியருமே - தங்கள் காலடி வருந்த நீண்ட பொழுது ஏறிய விறலியரும், வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன் - வாழ்தலை விரும்பி பொய்யைக் கூற மாட்டேன், மெய் கூறுவல் - மெய்யைக் கூறுவேன், ஓடாப் பூட்கை உரவோர் மருக - புறமுதுகிட்டு ஓடாத வலியர்களின் வழித் தோன்றலே, உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந - உயர்ந்த உச்சியையுடைய உழாத நாஞ்சில் மலையின் தலைவனே (உழாஅ - அளபெடை), மாயா உள்ளமொடு - மறவாத உள்ளத்துடன்,பரிசில் துன்னி - பரிசுக்காக வந்து, கனி பதம் பார்க்கும் காலை அன்றே - ஏற்ற வேளை இல்லை (அன்றே - ஏகாரம் அசைநிலை), ஈதல் ஆனான் வேந்தே - உனக்கு விடாது தருகின்றான் உன் மன்னன், வேந்தற்குச் சாதல் அஞ்சாய் நீயே - உன்னுடைய மன்னனுக்காக சாவதற்கு அஞ்சாதவன் நீ, ஆயிடை - அவ்விடத்தில், இரு நிலம் மிளிர்ந்திசினாஅங்கு - பெரிய நிலம் பிறழ்ந்தாற் போல் (மிளிர்ந்திசினாஅங்கு - அளபெடை), ஒரு நாள் - ஒரு நாள், அருஞ்சமம் வருகுவதாயின் - அரிய போர் வருவதானால், வருந்தலும் உண்டு - வருந்துவது உண்டு, என் பைதலம் கடும்பே - என் வருந்தும் சுற்றத்தார் (கடும்பே - ஏகாரம் அசைநிலை)