புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 130
சூல் பத்து ஈனுமோ?
சூல் பத்து ஈனுமோ?
பாடியவர் :
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன் :
ஆய் அண்டிரன்.
திணை :
பாடாண்.
துறை :
இயன் மொழி.
பாடல் பின்னணி:
கடையெழு வள்ளல்களுள் ஒருவன் ஆய் அண்டிரன். அவனிடம் வந்த பரிசிலர்க்கு யானைகளை மிகுதியாக அவன் வழங்குவதைக் கண்டு பெரும் வியப்புக் கொண்டு பாடுகின்றார் முடமோசியார்.
இளம் பிடி ஒரு சூல் பத்து ஈனும்மோ,
நின்னும் நின் மலையும் பாடி வருநர்க்கு
இன் முகம் கரவாது உவந்து நீ அளித்த
அண்ணல் யானை எண்ணின், கொங்கர்க் . . . . [05]
குட கடல் ஓட்டிய ஞான்றைத்
தலைப் பெயர்த் திட்ட வேலினும் பலவே.
பொருளுரை:
ஒளியுடைய மணிகளால் செய்யப்பட வளைந்த அணிகலன்களை அணிந்த ஆய் அண்டிரனே! உனது நாட்டில் இளம் பெண் யானைகள் ஒரு கர்ப்பத்தில் பத்துக் கன்றுகள் பெற்றெடுக்குமோ? உன்னையும், உனது மலையையும் பாடி வருபவர்களுக்கு உன் இனிய முகத்தை மறைக்காமல் மனம் உவந்து, நீ அளித்த உயர்ந்த யானைகளின் எண்ணிக்கையைக் கொண்டு பார்த்தால் உன்னால் மேற்குக் கடல் திசை நோக்கி விரட்டியடிக்கப்பட்ட கொங்கர்கள், தோற்று ஓடும் பொழுது விட்டுச் சென்ற வேல்களின் எண்ணிக்கையை விடப் பலவாகும்.
சொற்பொருள்:
விளங்கு மணி - ஒளியுடைய மணிகள், கொடும் பூண் - வளைந்த அணிகலன்கள், ஆஅய் - ஆய் அண்டிரன் (ஆஅய் - அளபெடை), நின்னாட்டு - உனது நாட்டில், இளம் பிடி - இளைய பெண் யானைகள், ஒரு சூல் - ஒரு கர்ப்பம், பத்து - பத்துக் கன்றுகள், ஈனும்மோ - பெற்றெடுக்குமோ (செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது), நின்னும் - உன்னையும், நின் மலையும் - உனது மலையையும், பாடி வருநர்க்கு - பாடல் பாடி வருபவர்க்கு, இன்முகம் - இனிய முகம், கரவாது - ஒளிக்காமல், உவந்து - மனம் மகிழ்ந்து, நீ அளித்த - நீ அளித்த, அண்ணல் யானை - உயர்ந்த யானைகள், எண்ணின் - எண்ணினால், கொங்கர் - ஆய் அண்டிரனுடன் மீது போர் செய்த கொங்கர் அரசர், குட கடல் - மேற்கு திசைக் கடல் (குடக்கு - மேற்கு), ஓட்டிய - விரட்டியடிக்கப்பட்ட, ஞான்றை - நாளில் (ஞான்று - நாள்), தலைப் பெயர்த்து - அங்கிருந்து ஓடி, இட்ட - கீழே விட்டுச் சென்ற, வேலினும் - வேல்களின் எண்ணிக்கையை விட, பலவே - பல (பலவே - ஏகாரம் அசைநிலை)