புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 128
முழவு அடித்த மந்தி!
முழவு அடித்த மந்தி!
பாடியவர் :
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன் :
ஆய் அண்டிரன்.
திணை :
பாடாண்.
துறை :
இயன்மொழி.
பாடல் பின்னணி:
ஆய் அண்டிரன், கடையெழு வள்ளல்களுள் ஒருவன். பகைவர்கள் அவனைப் போரில் வெல்வது அரிது என்பதைப் புலவர் இந்தப் பாடலில் கூறுகின்றார்.
இரவலர் நாற்றிய விசிகூடு முழவின்
பாடின் தெண் கண் கனி செத்து அடிப்பின்,
அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும்,
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில், . . . . [05]
ஆடுமகள் குறுகின் அல்லது,
பீடு கெழு மன்னர் குறுகலோ அரிதே.
பொருளுரை:
ஊர்ப் பொது இடத்தில் உள்ள பலா மரத்தின் பெரிய கிளையில் இருந்த பெண் குரங்கு, பரிசில் வேண்டி வந்தவர்கள் கிளையில் தொங்கவிட்ட இறுகக் கட்டிய மத்தளத்தைப் பலாப்பழம் என்று கருதி அதன் தெளிந்த கண்ணில் அடிக்க, அதனால் எழுந்த இசைக்கு மாறாக அவ்விடத்தில் உள்ள அன்னச் சேவல் எழுந்து ஒலிக்கும், கால்களில் வீரக்கழலும் கைகளில் தொடியும் அணிந்த ஆய் அண்டிரனின் மழை மேகம் தவழும் பொதியின் மலையில். அம் மலையை, ஆடி வரும் மகளிரால் அணுக முடியுமே தவிரப் பெருமை பொருந்திய மன்னர்களால் அணுக முடியாது.
சொற்பொருள்:
மன்றப் பலவின் - பொது இடத்தில் உள்ள பலா மரத்தின், மாச் சினை - பெரிய மரக் கிளை, மந்தி - பெண் குரங்கு, இரவலர் - பரிசில் வேண்டி வந்தவர்கள், நாற்றிய - தொங்கவிட்ட, விசி கூடு முழவின் - பிணிப்புப் பொருந்திய மத்தளத்தின், பாடின் - இனிய இசை, தெண்கண் - முரசின் தெளிந்த கண், கனி செத்து - கனி என்று கருதி, அடிப்பின் - அடிப்பதால், அன்னச்சேவல் - அன்னச் சேவல், மாறு எழுந்து - மாறாக எழுந்து, ஆலும் - ஒலிக்கும், ஆடும், கழல் - காலில் அணியப்படும் வீரக்கழல், தொடி - கையில் அணியப்படும் அணிகலன், ஆஅய் - ஆய் அண்டிரனின் (ஆஅய் - அளபெடை), மழை தவழ் - மழை மேகம் தவழும், பொதியில் - பொதியில் மலை, ஆடுமகள் - ஆடும் பெண், குறுகின் - நெருங்கினால், அல்லது - அல்லாமல், பீடு கெழு - பெருமையுடைய, மன்னர் - அரசர் குறுகலோ - அணுகுதல், அரிதே - கடினம் (அரிதே - ஏகாரம் அசைநிலை)