புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 119
வேந்தரிற் சிறந்த பாரி!
வேந்தரிற் சிறந்த பாரி!
பாடியவர் :
கபிலர்.
பாடப்பட்டோன் :
வேள் பாரி.
திணை :
பொதுவியல்.
துறை :
கையறுநிலை.
சிறப்பு :
'நிழலில் நீளிடைத் தனிமரம்' போல விளங்கிய பாரியது வள்ளன்மை.
பாடல் பின்னணி:
கபிலர், பாரியின் கொடைத் தன்மைப் பற்றியும், அவனது இறப்பினால் பறம்பு நாட்டிற்கு ஏற்பட்ட அழிவைப் பற்றியும் மனம் வருந்தி இயற்றிய பாடல் இது.
களிற்று முக வரியின் தெறுழ் வீ பூப்பச்
செம்புற்று ஈயலின் இன் அளைப் புளித்து
மென் தினை யாணர்த்து நந்தும் கொல்லோ,
நிழலில் நீள் இடைத் தனி மரம் போலப், . . . . [05]
பணை கெழு வேந்தரை இறந்தும்,
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே?
பொருளுரை:
பாரி இருந்த பொழுது, கார் காலத்தில் மழை பெய்து ஓய்ந்த இனிய நேரத்தில், யானையின் முகத்தில் உள்ள புள்ளிகளைப் போல் தெறுழ்ப் பூக்கள் மலர்ந்தன. செந்நிறப் புற்றில் உள்ள ஈசல் இனிய மோருடனும் புளியுடனும் சமைக்கப்பட்டது. மென்மையான தினையுடன் செழிப்பு உடையதாய் இருந்தது பறம்பு நாடு. நிழல் இல்லாத நீண்ட வழியில் நின்று நிழலளிக்கும் தனி மரம் போல, முரசுடை வேந்தர்களை விட அதிகமாக வழங்கிய வள்ளலின் நாடு இனி அழிந்து விடுமோ?
குறிப்பு:
யாணர் - புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).
சொற்பொருள்:
கார் - கார் காலத்தில், பெயல் - மழை பெய்து, தலைஇய - மாறிய (தலைஇய - அளபெடை), காண்பு - காட்சி, இன் காலை - இனிய காலம், களிற்று - ஆண் யானையின், முக வரியின் - முகத்தில் உள்ள புள்ளிகளைப் போன்று (வரியின் - இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), தெறுழ் - தெறுழ் மலர்கள், வீ பூப்ப - மலர் பூத்திருக்க (பூப்ப - வினையெச்சம்), செம்புற்று - சிவப்பு நிறத்துப் புற்று, ஈயலின் - ஈசலை, இன் அளை - இனிய மோர், புளித்து - புளியைச் சேர்த்து, மென் தினை - மென்மையான தினை, யாணர்த்து - புதிய வருவாயை உடையது, செல்வம் உடையது, நந்தும் கொல்லோ - அழிந்து விடுமோ, நிழலில் - நிழலின், நீள் இடை - நீண்டவழி, தனி மரம் - தனித்து இருக்கும் மரம், போல - போல, பணை கெழு - பணை முரசையுடைய, வேந்தரை இறந்தும் - வேந்தர்களைக் கடந்தும், இரவலர்க்கு - கேட்பவர்களுக்கு, ஈயும் - கொடுக்கும், வள்ளியோன் - கொடைத் தன்மை உடையோன், நாடே - நாடு (நாடே - ஏகாரம் அசைநிலை)