புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 118

சிறுகுளம் உடைந்துபோம்!


சிறுகுளம் உடைந்துபோம்!

பாடியவர் :

  கபிலர்.

பாடப்பட்டோன் :

  வேள் பாரி.

திணை :

  பொதுவியல்.

துறை :

  கையறுநிலை.


பாடல் பின்னணி:

பாரியின் நண்பரும் புலவருமான கபிலர், பாரியின் இறப்பிற்குப் பின் பறம்பு நாட்டின் அழிவைப் பற்றி மனம் வருந்தி இயற்றிய பாடல் இது.

அறையும் பொறையும் மணந்த தலைய,
எண் நாள் திங்கள் அனைய கொடும் கரைத்
தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ,
கூர் வேல் குவைஇய மொய்ம்பின்
தேர் வண் பாரி தண் பறம்பு நாடே . . . . [05]

பொருளுரை:

பாறைகளையும், சிறு குன்றுகளையும் கொண்ட இடமாக, எட்டாம் நாள் நிலவு போல வளைந்த கரையை உடைய தெளிந்த நீர் நிறைந்த சிறிய குளமானது, கூரிய வேல் ஏந்திய திரண்ட தோள்கள் கொண்டவனும் தேர்களைப் பரிசாகக் கொடுத்தவனுமான பாரியின் குளிர்ந்த பறம்பு மலை நாட்டில், இன்று பாதுகாப்பார் இன்றி உடைந்து கெட்டழிந்து போகின்றது.

குறிப்பு:

சிறிய குளத்தின் கரை உடைந்தது போல் பாரியின் பறம்பு நாடு பாழாகி விட்டது என்பது இப் பாடலின் உட்பொருள்.

சொற்பொருள்:

அறையும் - பாறைகளையும், பொறையும் - சிறு குன்றுகளையும், மணந்த - சேர்ந்த, தலைய - இடத்தையுடையவாக, எண் நாள் - எட்டாம் நாள், திங்கள் - நிலவு, அனைய - போல, கொடும் கரை - வளைந்த கரை, தெண்ணீர் - தெளிந்த நீர், சிறு குளம் - சிறிய குளம், கீள்வது - உடைந்தது, மாதோ - மாது, ஓ அசைநிலைகள், கூர்வேல் - கூரிய வேல், குவைஇய மொய்ம்பின் - திரண்ட தோளையுடைய (குவைஇய - அளபெடை), தேர் வண் - தேர்களைக் கொடுத்த, பாரி - பாரி, தண் பறம்பு நாடே - குளிர்ந்த பறம்பு நாடு (நாடே - ஏகாரம் அசைநிலை)