புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 112
உடையேம் இலமே!
உடையேம் இலமே!
பாடியவர் :
பாரி மகளிர்.
பாடப்பட்டோன் :
வேள் பாரி
திணை :
பொதுவியல்
துறை :
கையறு நிலை
பாடல் பின்னணி:
பாரி இறந்த பின்னர், பாரியின் மகளிரைக் கபிலர் தன் பெண்களாக ஏற்றுப் பாதுகாத்து வந்தார். இறந்த தங்கள் தந்தையை நினைத்து வருந்தி அந்த மகளிர் பாடும் பாடல் இது.
எந்தையும் உடையேம், எம் குன்றும் பிறர் கொளார்,
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்,
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார், யாம் எந்தையும் இலமே . . . . [05]
பொருளுரை:
நாங்கள் கடந்த மாத வெண்ணிலவு ஒளியின் கீழ் எங்கள் தந்தையை உடையவர்களாக இருந்தோம். எங்கள் பறம்பு மலையையும் பிறர் கொள்ளவில்லை. இன்றைய மாதத்தில், இந்த வெண்ணிலவின் கீழ், வென்று அறைந்த முரசினையுடைய வேந்தர்கள் எங்கள் பறம்பு மலையைக் கைப்பற்றிக் கொண்டனர். நாங்கள் எங்கள் தந்தையையும் இழந்து தனித்து இருக்கின்றோம்.
குறிப்பு:
வென்று எறி முரசின் வேந்தர் - ஒளவை துரைசாமி உரை - ஈண்டு இகழ்ச்சிக் குறிப்பு.
சொற்பொருள்:
அற்றை - அன்றைய, திங்கள் - திங்கள், மாதம், அவ்வெண் நிலவின் - அந்த - வெண்நிற நிலவின் கீழ், எந்தையும் - எம் தந்தையும், உடையேம் - உடையவர்களாக இருந்தோம், எம் குன்றும் - எங்கள் மலையையும், பிறர் கொளார் - மற்றவர்கள் கைப்பற்றவில்லை, இற்றை - இன்றைய, திங்கள் - திங்கள், மாதம், இவ்வெண்நிலவின் - இந்த வெள்ளை நிற நிலவின் கீழ், வென்று எறி முரசின் - வென்று அறைந்த முரசினையுடைய, வேந்தர் - வேந்தர்கள், எம் குன்றும் - எங்கள் மலையையும், கொண்டார் - கைப்பற்றினர், யாம் - நாங்கள், எந்தையும் - எங்கள் தந்தையும், இலமே - இல்லை (இலமே - ஏகாரம் அசைநிலை)