புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 110

யாமும் பாரியும் உளமே!


யாமும் பாரியும் உளமே!

பாடியவர் :

  கபிலர்.

பாடப்பட்டோன் :

  வேள் பாரி.

திணை :

  நொச்சி.

துறை :

  மகள் மறுத்தல்.

சிறப்பு :

  'மூவிருங்கூடி' என்றது, மூவேந்தரும் ஒருங்கே முற்றிய செய்தியை வலியுறுத்தும்.


பாடல் பின்னணி:

மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பாரியின் பறம்பு மலையைப் பெரும்படையுடன் சூழ்ந்து கொண்டனர். பாரியின் நண்பரும் புலவருமான கபிலர், பாரியின் போர் வல்லமையையும், கொடை வண்மையையும் புகழ்ந்து, அவர்களை அறிவுறுத்தும்படியாக இயற்றிய பாடல் இது.

கடந்து அடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கு அரிதே,
முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நல்நாடு,
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்,
யாமும் பாரியும் உளமே, . . . . [05]

குன்றும் உண்டு, நீர் பாடினிர் செலினே.

பொருளுரை:

கடந்து சென்று அழிக்கும் படையோடு நீங்கள் மூவரும் கூடிப் போர் செய்தாலும் பறம்பு மலையை வெல்வதற்கு இயலாது. முந்நூறு ஊர்களைக் கொண்டது இந்தக் குளிர்ந்த, நல்ல பறம்பு நாடு. முந்நூறு ஊர்களையும் பரிசில் வேண்டி வந்தவர்கள் பெற்றுக் கொண்டு விட்டனர். இங்கே நானும் பாரியும் உள்ளோம். நீங்கள் பாடியபடி பாரியிடம் சென்றால், பறம்பு மலையும் உங்களுக்கு உண்டு.

சொற்பொருள்:

கடந்து - கடந்து சென்று, அடு - கொல்லும், அழிக்கும், தானை - படை, மூவிரும் - நீங்கள் மூவரும், கூடி - சேர்ந்து, உடன்றனிர் ஆயினும் - போர் செய்தீர்கள் ஆனாலும், பறம்பு - பறம்பு மலையை, கொளற்கு அரிதே - கைப்பற்றுவதற்கு அரிது, முந்நூறு - முந்நூறு, ஊர்த்தே - ஊர்களைக் கொண்ட, தண் - குளிர்ந்த, அழகிய, பறம்பு - பறம்பு, நல் நாடு - நல்ல நாடு, முந்நூறு ஊரும் - முந்நூறு ஊர்களையும், பரிசிலர் - பரிசு வேண்டி வந்தவர்கள், பெற்றனர் - பெற்றனர், யாமும் - நானும், பாரியும் - பாரியும், உளமே - உள்ளோம் (உளமே - ஏகாரம் அசைநிலை), குன்றும் உண்டு - பறம்பு மலையும் உண்டு, நீர் - நீங்கள், பாடினிர் - பாடுபவராய், செலினே - சென்றால் (செலினே - ஏகாரம் அசைநிலை)