புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 108

பறம்பும் பாரியும்!


பறம்பும் பாரியும்!

பாடியவர் :

  கபிலர்.

பாடப்பட்டோன் :

  வேள் பாரி.

திணை :

  பாடாண்.

துறை :

  இயன்மொழி.


பாடல் பின்னணி:

பறம்பு மலையின் 300 ஊர்களையும் பரிசில் வேண்டிப் பாடி வந்தவர்களுக்குக் கொடையாக அளித்துவிட்ட பாரி, தன்னையே கொடையாக அளிக்கத் துணிவான் என்று பாரியின் கொடை வண்மையைப் புகழ்ந்து கபிலர் இயற்றிய பாடல் இது.

குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி
ஆரம் ஆதலின், அம் புகை அயலது
சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும்
பறம்பு பாடினர் அதுவே அறம் பூண்டு
பாரியும் பரிசிலர் இரப்பின், . . . . [05]

வாரேன் என்னான், அவர் வரையன்னே.

பொருளுரை:

குறத்தி எரித்த காய்ந்த சந்தனக் கொள்ளியால் வெளிப்பட்ட அந்த அழகிய நறுமணப் புகை, அருகில் உள்ள மலைச் சரிவில் உள்ள வேங்கை மரத்தில் பூக்களையுடைய கிளைகளில் படர்ந்துத் தவழும் அழகிய பறம்பு மலையைப் பாடிப் பரிசில் பெற்றவர்களுக்குச் சொந்தமாகிவிட்டது. கொடுப்பதையே அறமாக மேற்கொண்ட பாரி, பரிசில் வேண்டுவோர் கேட்டால் வரமாட்டேன் என்று கூறாமல், தன்னையே கொடையாக அளித்து அவர்களுடைய எல்லையில் சென்று நிற்பான்.

சொற்பொருள்:

குறத்தி - மலையில் வாழும் பெண், மாட்டிய - எரித்த, வறற் கடைகொள்ளி - உலர்ந்த ஒரு முனையில் எரியும் கொள்ளிக்கட்டை, ஆரம் - சந்தனம், ஆதலின் - ஆதலால், அம் புகை - அழகிய புகை, அயல் அது - அருகில் உள்ள, சாரல் - மலைச் சரிவு, வேங்கைப் - வேங்கை மரம், பூஞ்சினை - பூக்களைக் கொண்ட மரக்கிளை, தவழும் - தவழும், பறம்பு - பறம்பு மலை, பாடினர் - பாடிப் பரிசில் பெற்றவர்கள், அதுவே - அவர்களுடையது (ஏகாரம் அசைநிலை), அறம் பூண்டு - அறத்தைக் கடமையாக மேற்கொண்டு, பாரியும் - பாரியும், பரிசிலர் - பரிசில் வேண்டுவோர், இரப்பின் - கேட்டால், வாரேன் - வரமாட்டேன், என்னான் - என்று கூறமாட்டான், அவர் - அவர்கள் வரையன்னே - எல்லையில் நிற்பான் (வரையன்னே - ஏகாரம் அசைநிலை)