புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 107
மாரியும் பாரியும்!
மாரியும் பாரியும்!
பாடியவர் :
கபிலர்.
பாடப்பட்டோன் :
வேள் பாரி.
திணை :
பாடாண்.
துறை :
இயன்மொழி.
பாடல் பின்னணி:
பாரியின் கொடைச் சிறப்பைக்கூற கபிலர் இயற்றிய பாடல் இது.
‘பாரி பாரி’ என்று பல ஏத்தி,
ஒருவர்ப் புகழ்வர் செந்நாப் புலவர்,
பாரி ஒருவனும் அல்லன்,
மாரியும் உண்டு, ஈண்டு உலகு புரப்பதுவே.
ஒருவர்ப் புகழ்வர் செந்நாப் புலவர்,
பாரி ஒருவனும் அல்லன்,
மாரியும் உண்டு, ஈண்டு உலகு புரப்பதுவே.
பொருளுரை:
செம்மையான நாக்கை உடைய புலவர்கள் எல்லாம் அவனுடைய புகழை வாழ்த்தி அவன் ஒருவனையே ‘பாரி பாரி’ என்று புகழ்கின்றனர். இங்கே பாரி ஒருவன் மட்டும் இல்லை, மழையும் உண்டு இந்த உலகைக் காப்பதற்கு.
குறிப்பு:
பழித்ததுபோல் புகழ்வது.
சொற்பொருள்:
பாரி பாரி - பாரி பாரி, என்று பல ஏத்தி - என்று பல செயல்களை வாழ்த்தி, ஒருவர்ப் புகழ்வர் - ஒருவனையே புகழ்கின்றனர், செந்நா புலவர் - செம்மையான நாக்கை உடைய புலவர்கள், பாரி - வேள் பாரி, ஒருவனும் அல்லன் - ஒருவன் மட்டும் இல்லை, மாரியும் உண்டு - மழையும் உண்டு, ஈண்டு - இங்கே, உலகு - உலகம், புரப்பதுவே - பாதுகாப்பதற்கு (புரப்பதுவே - ஏகாரம் அசைநிலை)