புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 104

யானையும் முதலையும்!


யானையும் முதலையும்!

பாடியவர் :

  அவ்வையார்.

பாடப்பட்டோன் :

  அதியமான் நெடுமான் அஞ்சி.

திணை :

  வாகை.

துறை :

  அரசவாகை.


பாடல் பின்னணி:

அதியமானைப் போரில் வெல்லும் பொருட்டு, அவன் ஊராகிய தகடூரைப் பகை மன்னர்கள் முற்றுகை இட்டனர். தகடூர் என்பது இன்றைய தருமபுரி. போர் மூண்டது. அதியமான் வெற்றி பெற்றான். அதியமான் போரில் வெற்றி அடைந்த பின் போரில் தோல்வியுற்ற பகை அரசர்களிடம் ஔவையார் இவ்வாறு கூறுகின்றார்.

போற்றுமின் மறவீர், சாற்றுதும் நும்மை,
ஊர்க் குறுமாக்கள் ஆடக் கலங்கும்
தாள் படு சின்னீர்க் களிறு அட்டு வீழ்க்கும்
ஈர்ப்பு உடைக் கராஅத்து அன்ன என்னை
நுண்பல் கருமம் நினையாது . . . . [05]

இளையன் என்று இகழின், பெறல் அரிது ஆடே.

பொருளுரை:

உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் மறவர்களே! உங்களுக்கு ஒன்றை அறிவிக்கிறோம். கேளுங்கள்! ஊரில் உள்ள சிறுவர்கள் விளையாடக் கலங்கும்படியான கால் அளவுள்ள நீருக்குள் யானையைக் கொன்று வீழ்த்தி இழுத்துச் செல்லும் முதலையைப் போன்ற என்னுடைய தலைவனான அதியமானின் நுட்பமாக ஆய்ந்து செய்யும் பல செயல்களைக் கருத்தில் கொள்ளாமல், அவனை இளையவன் என்று இகழ்ந்தால், நீங்கள் வெற்றி பெறுவது அரிது.

சொற்பொருள்:

போற்றுமின் - பாதுகாத்துக் கொள்வீர் (மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி), மறவீர் - வீரர்களே, சாற்றுதும் - பறை சாற்றுவோம், அறிவிப்போம், நும்மை - உங்களுக்கு, ஊர் - ஊரில் உள்ள குறுமாக்கள் - சிறு பிள்ளைகள், ஆட - விளையாட, கலங்கும் - கலங்கும், தாள்படு - கால் அளவுபட்ட, சின்னீர் - குறைந்த தண்ணீர், களிறு - ஆண் யானை, அட்டு - கொன்று, அழித்து, வீழ்க்கும் - வீழ்த்தும், ஈர்ப்பு உடை - இழுத்துச் செல்லும் திறன் உடைய, கராஅத்து அன்ன - முதலையைப் போல (கராஅத்து - கராம், அத்து சாரியை), என் ஐ - என்னுடைய தலைவன், நுண்பல் - நுண்ணிய பல, கருமம் - செயல்கள், நினையாது - நினைக்காமல், இளையன் என்று - இளையவன் என்று கூறி, இகழின் - இகழ்ந்தால், பெறல் - பெறுவது, அரிது - அரிது, இயலாது, ஆடே - வெற்றி (ஆடே - ஏகாரம் அசைநிலை)