புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 102

சேம அச்சு!


சேம அச்சு!

பாடியவர் :

  அவ்வையார்.

பாடப்பட்டோன் :

  அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினி.

திணை :

  பாடாண்.

துறை :

  இயன்மொழி.

எருதே இளைய; நுகம் உண ராவே;
சகடம் பண்டம் பெரிதுபெய் தன்றே;
அவல் இழியினும், மிசை ஏறினும்,
அவணது அறியுநர் யார்? என, உமணர்
கீழ்மரத்து யாத்த சேமஅச்சு அன்ன, . . . . [05]

இசை விளங்கு கவிகை நெடியோய்! திங்கள்
நாள்நிறை மதியத்து அனையை; இருள்
யாவண தோ, நின் நிழல்வாழ் வோர்க்கே?

பொருளுரை:

வண்டியில் ஏற்றியுள்ள பாரம் பெரிது. எனினும் வண்டியில் பூட்டியிருக்கும் நுகத்தில் அதனை இழுத்துச் செல்லும் இளமைப்பருவத்து எருதுக்கு நுகத்தில் பாரம் தெரியாது. வண்டி பள்ளத்தில் இறங்கினாலும் மேட்டில் ஏறினாலும் பாரமானது எருது இழுக்கும் நுகப்பகுதியில் தாக்காமல் இருக்க வண்டியின் பின்பக்கம் நடுப் பார்மரத்தில் சேம - அச்சு என்னும் சுளையிட்டு மாட்டிய குத்துக்கட்டையைக் கட்டித் தொங்கவிட்டிருப்பர். அதுபோல இளவரசன் பொகுட்டெழினி ஆட்சிக்கு அரசன் அதியமான் சேம அச்சாக இருந்துவந்தான். இளவரசன் பொகுட்டெழினி முழுநிலா போலத் திகழ்ந்தான். அவன் ஆட்சியில் வாழும் மக்களுக்கு இருள் எங்கு இருக்கும்?