புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 097
மூதூர்க்கு உரிமை!
மூதூர்க்கு உரிமை!
பாடியவர் :
அவ்வையார்.
பாடப்பட்டோன் :
அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை :
பாடாண்.
துறை :
இயன் மொழி.
உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின்,
ஊனுற மூழ்கி, உருவிழந் தனவே;
வேலே, குறும்படைந்த அரண் கடந்தவர்
நறுங் கள்ளின் நாடு நைத்தலின், . . . . [05]
சுரை தழீஇய இருங் காழொடு
மடை கலங்கி நிலைதிரிந் தனவே;
களிறே, எழூஉத் தாங்கிய கதவம் மலைத்து, அவர்
குழூஉக் களிற்றுக் குறும்பு உடைத்தலின்,
பரூஉப் பிணிய தொடிகழிந் தனவே; . . . . [10]
மாவே, பரந்தொருங்கு மலைந்த மறவர்
பொலம் பைந்தார் கெடப் பரிதலின்,
களன் உழந்து அசைஇய மறுக்குளம் பினவே;
அவன் தானும், நிலம் திரைக்கும் கடல் தானைப்
பொலந் தும்பைக் கழல் பாண்டில் . . . . [15]
கணை பொருத துளைத்தோ லன்னே;
ஆயிடை, உடன்றோர் உய்தல் யாவது? தடந்தாள்,
பிணிக் கதிர், நெல்லின் செம்மல் மூதூர்
நுமக்குஉரித்து ஆகல் வேண்டின், சென்றவற்கு
இறுக்கல் வேண்டும் திறையே; மறிப்பின், . . . . [20]
ஒல்வான் அல்லன், வெல்போ ரான் எனச்
சொல்லவும் தேறீர் ஆயின், மெல்லியல்,
கழற் கனி வகுத்த துணைச் சில் ஓதிக்
குறுந்தொடி மகளிர் தோள்விடல்
இறும்பூது அன்று; அது அறிந்துஆ டுமினே . . . . [25]
பொருளுரை:
வாள் - போருக்காகத் தீட்டப்பட்ட வாள் மதிலைக் காத்த மறவர்களை அழித்ததால் கறிக்கறை படிந்து உரு அழகினை இழந்துவிட்டன. வேல் - சிற்றூர் அரண்களைக் கடந்து செல்கையில் அவ்வூர் மக்களை நைத்ததால் அதன் கூரான வயிர முனை மழுங்கி நிலைதிரிந்து போயின. களிறு - பகைவர் கோட்டைக் கதவின் தாழ்ப்பாள்மரமான எழுமரம் உடையும்படியும், பகைவர் களிறுகளின் குறும்பு ஆடங்கவும் தாக்கியதால் தந்தங்களில் போடப்பட்டிருந்த பூண் - வளையத்தை இழந்தன. மா - போரிடும் மறவர்களின் மீது தாவி நடந்து கறை படிந்த குளம்புகளை உடையவாயின. அரசன் - பொன்னாலான தும்பைப் பூவால் தொடுக்கப்பட்ட மாலை அணிந்த மார்பில் உள்ள கவசத் தோல் துளைபட்டுத் தோன்றுகிறான். இந்த நிலையில் இவனை எழிர்ப்பவர்களே! கேளுங்கள். “நெல் விளையும் உம் நிலம் உமக்கே உரியதாக வைத்துக்கொள்ள விரும்பினால் இவனுக்குத் திறை கொடுத்துவிடுங்கள். மறுத்தால் போரில் வெற்றி கண்ட இவன் பொறுக்கமாட்டான் என்று நான் கூறுவதை நீங்கள் புரிந்துகொள்ளாவிட்டால் உங்களைத் தழுவிய உங்கள் மனைவியரின் தோள் உங்களை இழக்கப்போவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இதனையாவது உணர்ந்துகொண்டு போரில் விளையாடுங்கள்.