புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 092
மழலையும் பெருமையும்!
மழலையும் பெருமையும்!
பாடியவர் :
அவ்வையார்.
பாடப்பட்டோன் :
அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை :
தும்பை.
துறை :
இயன் மொழி.
பாடல் பின்னணி:
நீண்ட காலம் உயிர்வாழச் செய்யும் அரிய நெல்லிக் கனியைப் பெற்ற அதியமான், அதை ஒளவைக்கு வழங்க, அப்பண்பைக் கண்டு வியந்த ஒளவையார் அதியமானைப் புகழ்ந்து இயற்றிய பாடல் இது.
பொருள் அறிவாரா, ஆயினும் தந்தையர்க்கு
அருள் வந்தனவால் புதல்வர் தம் மழலை,
என் வாய்ச் சொல்லும் அன்ன, ஒன்னார்
கடி மதில் அரண் பல கடந்து . . . . [05]
நெடுமான் அஞ்சி நீ அருளல்மாறே.
பொருளுரை:
குழந்தைகளின் மழலைமொழி யாழ் இசையோடு பொருந்தாது. காலத்தோடும் பொருந்தாது. பொருளை அறிவதற்கும் இயலாது. அவ்வாறு இருப்பினும், தந்தையர்க்கு அம்மழலைச் சொற்கள் குழந்தைகள் மீது அன்பை வரவழைக்கின்றன.
காவல் மிகுந்த மதில்களைக் கொண்ட கோட்டைகள் பலவற்றை வென்ற அதியமான் நெடுமான் அஞ்சியே! என் சொற்களும் குழந்தையின் மழலைச் சொற்களைப் போன்றவை, நீ அருள் மிகுந்து (ஒரு தந்தையைப் போல்) இருப்பதால்.
குறிப்பு:
அருளல்மாறே - ஏகாரம் அசைநிலை. வந்தனவால் - வந்தன + ஆல், ஆல் ஓர் அசைச் சொல்.
சொற்பொருள்:
யாழொடும் கொள்ளா - யாழிசையுடன் ஒத்து வராது, பொழுதொடும் புணரா - காலத்தோடும் பொருந்தாது, பொருள் அறிவாரா - பொருளை அறிய இயலாது, ஆயினும் - ஆனாலும், தந்தையர்க்கு - தந்தைகளுக்கு, அருள் வந்தனவால் - அருளை வரவழைக்கின்றன (வந்தன + ஆல், ஆல் ஓர் அசைச்சொல்), புதல்வர் தம் மழலை - தம் குழந்தைகளின் மழலை, என் வாய்ச் சொல்லும் - என் வாயிலிருந்து வரும் சொற்களும், அன்ன - போல, ஒன்னார் - பகைவர், கடி - காவல், மதில் - மதில் சுவர், அரண் - கோட்டை, பல - பலவற்றை, கடந்து - வென்று, நெடுமான் அஞ்சி - அதியமான் நெடுமான் அஞ்சியே, நீ அருளல்மாறே - நீ அருள்வதால் (அருளல்மாறே - ஏகாரம் அசைநிலை, மாறு ஏதுப்பொருள் (காரணப் பொருள்) தரும் இடைச்சொல்)