புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 086

கல்லளை போல வயிறு!


கல்லளை போல வயிறு!

பாடியவர் :

  காவற்பெண்டு

திணை :

  வாகை

துறை :

  ஏறாண் முல்லை


பாடல் பின்னணி:

பெண் புலவர் காவற்பெண்டின் வீட்டிற்கு வந்த ஒருவர், “உங்கள் மகன் எங்கு உள்ளான்?” என்று அவரிடம் கேட்க, அதற்கு அந்த மறத்தாயின் பதிலாக அமைந்த பாடல் இது.

சிற்றில் நற்றூண் பற்றி, நின் மகன்
யாண்டு உளனோ என வினவுதி, என் மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன், ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே . . . . [05]

தோன்றுவன் மாதோ போர்க் களத்தானே.

பொருளுரை:

என் சிறிய இல்லத்தில் உள்ள நல்ல தூணைப் பற்றிக் கொண்டு “உன் மகன் எங்கு உள்ளான்?” என்று நீ கேட்கிறாய். என் மகன் எங்கு இருக்கிறான் என்பது எனக்குத் தெரியாது. அவனைப் பெற்ற என் வயிறு புலி இருந்து விட்டுப் போன கல் குகையைப் போன்றது. அத்தகைய வீரம் பொருந்திய அவன் போர்க்களத்தில் தோன்றுவான். அங்கு அவனைக் காணலாம்!

சொற்பொருள்:

சிற்றில் - சிறிய இல்லம், நற்றூண் - நல்ல தூண், பற்றி - பற்றிக் கொண்டு, நின் மகன் - உன் மகன், யாண்டு உளனோ - எங்கு உள்ளான், என - என்று, வினவுதி - நீ வினவுகிறாய் (வினவுதி - முன்னிலை வினைமுற்று), என் மகன் - என் மகன், யாண்டு உளன் ஆயினும் - எங்கு உள்ளான் என்று, அறியேன் - நான் அறியவில்லை, ஓரும் - அசைச்சொல், புலி - புலி, சேர்ந்து - கிடந்து, போகிய - போன, கல் அளை - கல் குகை, போல - போல, ஈன்ற வயிறோ - பெற்ற வயிறு, இதுவே - இது தான், தோன்றுவன் - தோன்றுவான், மாதோ - அசைச்சொல், போர்க் களத்தானே - போர்க்களத்தில் (போர்க்களத்தானே - ஏகாரம் அசைநிலை)