புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 084
புற்கையும் பெருந்தோளும்!
புற்கையும் பெருந்தோளும்!
பாடியவர் :
பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்.
பாடப்பட்டோன் :
சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.
திணை :
கைக்கிளை.
துறை :
பழிச்சுதல்.
யாமே புறஞ்சிறை இருந்தும் பொன் அன்னம்மே;
போர் எதிர்ந்து என் ஐ போர்க்களம் புகினே
கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண்,
ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு . . . . [05]
உமணர் வெரூஉம் துறை அன்னன்னே.
யாமே, புறஞ்சிறை இருந்தும் பொன்னன் னம்மே
போறெதிர்ந்து என் ஜ் போர்க்களம் புகினே,
கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண்,
ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு . . . . [05]
உமணர் வெரூஉம் துறையன் னன்னே!
பொருளுரை:
என்னுடைய தலைவன் கஞ்சியை உண்டாலும், பெரிய தோளினையுடையவன். நானே, அவன் இருக்கும் இடத்தின் சுவரின் புறப்பகுதியில் இருந்தும், பொன்னைப்போன்ற பசலை உடையவளாக உள்ளேன். போரை ஏற்று, என் தலைவன் போர்க்களத்தில் புகுந்தால், பெரும் ஆரவாரத்தையுடைய விழாக்கள் கொண்ட ஊரிடத்தில், செருக்குற்ற (தங்கள் மறம் பேசி மகிழ்ந்த) வீரர்களுக்கு, அவன் உப்பு வணிகர்கள் அஞ்சும் ஏற்றத் தாழ்வு உடைய துறையைப் போன்றவன்.
குறிப்பு:
என்னை, என் ஐ - அன்னை என்னை என்றலும் உளவே தொல் நெறி முறைமை சொல்லினும் எழுத்தினும் தோன்றா மரபின என்மனார் புலவர் (தொல்காப்பியம், பொருளியல் 50).
சொற்பொருள்:
என் ஐ புற்கை உண்டும் - என்னுடைய தலைவன் கஞ்சியை உண்டாலும், பெருந்தோளன்னே - பெரிய தோளினையுடையவன் (பெருந்தோளன்னே - ஏகாரம் அசைநிலை), யாமே - நானே, புறஞ்சிறை இருந்தும் - சுவரின் புறப்பகுதியில் இருந்தும், பொன் அன்னம்மே - பசலை உடையவளாக உள்ளேன் (அன்னம்மே - தன்மைப் பன்மை, செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது), போர் எதிர்ந்து என் ஐ போர்க்களம் புகினே - போரை ஏற்று என் தலைவன் போர்க்களத்தில் புகுந்தால் (புகினே - ஏகாரம் அசைநிலை), கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண் - பெரும் ஆரவாரத்தையுடைய விழாக்கள் கொண்ட ஊரிடத்தில் (கல்லென் - ஒலிக்குறிப்பு), ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு - செருக்குற்ற (தங்கள் மறம் பேசி மகிழ்ந்த) வீரர்களுக்கு, உமணர் வெரூஉம் துறை அன்னன்னே - உப்பு வணிகர்கள் அஞ்சும் ஏற்றத் தாழ்வு உடைய துறையைப் போன்றவன் (வெரூஉம் - அளபெடை, அன்னன்னே - ஏகாரம் அசைநிலை)