புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 083
இருபாற்பட்ட ஊர்!
இருபாற்பட்ட ஊர்!
பாடியவர் :
பெருங்கோழி நாய்கண் மகள் நக்கண்ணையார்.
பாடப்பட்டோன் :
சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.
திணை :
கைக்கிளை.
துறை :
பழிச்சுதல்.
பாடல் பின்னணி:
சோழ மன்னன் மீது காதல் கொள்கின்றார் ஓர் இளம் பெண் புலவர். தன் தாய்க்குத் தான் அஞ்சுவதைப் பற்றியும், தன் காதல் பெருமையை அறியாத ஊரைப் பற்றியும் எண்ணி, இந்தப் பாடலை எழுதியுள்ளார்.
தொடி கழித்திடுதல் யான் யாய் அஞ்சுவலே,
அடு தோள் முயங்கல் அவை நாணுவலே,
என் போல் பெரு விதுப்புறுக, என்றும்
ஒரு பால் படாஅது ஆகி . . . . [05]
இரு பாற்பட்ட இம் மையல் ஊரே.
பொருளுரை:
வீரக்கழல் அணிந்த கால்களையும் கருமை நிறத் தாடியையுமுடைய இளைஞன் மேல் நான் கொண்ட காதலால், என் வளையல்கள் என் கையிலிருந்து கழலுகின்றன. என்னுடைய காதல் என் தாய்க்குத் தெரிந்து விடுமோ என்று நான் அஞ்சுகிறேன். என் தலைவனின் வலிய தோள்களைத் தழுவ விரும்புகின்றேன். ஆனால் அவையில் பலரும் இருப்பதால் எனக்கு நாணமாக உள்ளது. என்னைப் போன்று பெரியதாக நடுங்கட்டும், ஒரு பக்கமும் சாராது, இரு பக்கமுமாக உள்ள இந்த மயங்கும் ஊர்.
குறிப்பு:
அவை நாணுவலே (3) - ஒளவை துரைசாமி உரை - சான்றோர் கூடிய அவையினர் ஒருத்தியை ஒருவனுக்குத் திருமணத்தால் கூட்டி வைப்பர் ஆதலின், அவர் தாம் விரும்பியவாறு தாமே சென்று கூடற்கு அவ்வயையினர் இகழ்வர் என்பதுபற்றி ‘அவை நாணுவர்’ என்றார். இரு பாற்பட்ட இம் மையல் ஊரே (6) - ஒளவை துரைசாமி உரை - யாயும் அவையுமாகிய இரு கூற்றிற் பட்ட இம் மயக்கத்தையுடைய ஊர்.
சொற்பொருள்:
அடி புனை தொடு கழல் - வீரக்கழல் அணிந்த கால்கள், மை அணல் காளைக்கு - கருநிறத் தாடியையுடைய இளைஞன் மேல் கொண்ட காதலால், என் தொடி கழித்திடுதல் - என்னுடைய வளையல்கள் என் கையிலிருந்து கழலுதலால் (நெகிழ்வதால்), யான் யாய் அஞ்சுவலே - என் தாய்க்கு அஞ்சுகிறேன் (அஞ்சுவல் - தன்மையொருமை வினைமுற்று, ஏகாரம் அசைநிலை), அடு தோள் முயங்கல் - அவனுடைய வலிய தோள்களைத் தழுவுதல், அவை நாணுவலே - ஆனால் அவையின் முன் அவனைத் தழுவதற்கு நாணுகின்றேன், என் போல் பெரு விதுப்புறுக - என்னைப் போன்று பெரியதாக நடுங்கட்டும், என்றும் ஒரு பால் படாஅது ஆகி - ஒரு பக்கமும் சாராது (படாஅது - அளபெடை), இரு பாற்பட்ட - இரு பக்கமாக உள்ள, இம் மையல் ஊரே - இந்த புரியாமல் மயங்கும் ஊர் (ஊரே - ஏகாரம் அசைநிலை)