புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 080
காணாய் இதனை!
காணாய் இதனை!
பாடியவர் :
சாத்தந்தையார்.
பாடப்பட்டோன் :
சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.
திணை :
தும்பை.
துறை :
எருமை மறம்.
இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்,
மைந்துடைமல்லன் மதவலி முருக்கி,
ஒருகால் மார்பொதுங் கின்றே; ஒருகால்
வருதார் தாங்கிப் பின்னெதுங் கின்றே;
நல்கினும் நல்கான் ஆயினும், வெல்போர்ப் . . . . [05]
போர் அருந் தித்தன் காண்கதில் அம்ம -
பசித்துப் பணைமுயலும் யானை போல,
இருதலை ஒசிய எற்றிக்,
களம்புகும் மல்லன் கடந்துஅடு நிலையே.
மைந்துடைமல்லன் மதவலி முருக்கி,
ஒருகால் மார்பொதுங் கின்றே; ஒருகால்
வருதார் தாங்கிப் பின்னெதுங் கின்றே;
நல்கினும் நல்கான் ஆயினும், வெல்போர்ப் . . . . [05]
போர் அருந் தித்தன் காண்கதில் அம்ம -
பசித்துப் பணைமுயலும் யானை போல,
இருதலை ஒசிய எற்றிக்,
களம்புகும் மல்லன் கடந்துஅடு நிலையே.
பொருளுரை:
மல்லன் உடல் மதமதப்பு (திமிர்) மிக்கவன். இவனும் போர்வைக் கோப்பெருநற்கிள்ளியும் மோதிக்கொண்டனர். மற்போர் நிகழ்ந்தது. போரிடும்போது கிள்ளியின் ஒருகால் மார்போடு மோதி மண்டியிட்டிருந்தது. மற்றொரு கால் பின்னிருந்து தாக்கும் படையை உதைத்து முறியடித்துக் கொண்டிருந்தது. பசியால் தென்னை மட்டை இரண்டு பக்கமும் வளையும்படி முறித்து இழுக்கும் யானை போலக் கிள்ளி போரிட்டுக்கொண்டிருந்தான். இதனைத் தித்தன் காண்பானாக என்கிறார் புலவர். (கிள்ளியின் வலிமையைத் தித்தன் உணராதிருந்தான் என்பது புலவர் கூற்றால் தெரியவருகிறது)