புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 068

மறவரும் மறக்களிரும்!


மறவரும் மறக்களிரும்!

பாடியவர் :

  கோவூர் கிழார்.

பாடப்பட்டோன் :

  சோழன் நலங்கிள்ளி.

திணை :

  பாடாண்.

துறை :

  பாணாற்றுப்படை.

உடும்பு உரித்து அன்ன என்பு எழு மருங்கின்
கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது,
சில்செவித்து ஆகிய கேள்வி நொந்து நொந்து,
ஈங்குஎவன் செய்தியோ? பாண! பூண்சுமந்து,
அம் பகட்டு எழிலிய செம் பொறி ஆகத்து . . . . [05]

மென்மையின் மகளிர்க்கு வணங்கி,வன்மையின்
ஆடவர்ப் பிணிக்கும் பீடுகெழு நெடுந்தகை,
புனிறு தீர் குழவிக்கு இலிற்றுமுலை போலச்
சுரந்த காவிரி மரங்கொல் மலிநீர்
மன்பதை புரக்கும் நன்னாட்டுப் பொருநன், . . . . [10]

உட்பகை ஒருதிறம் பட்டெனப், புட்பகைக்கு
ஏவான் ஆகலின், சாவோம் யாம் என,
நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்பத்,
தணிபறை அறையும் அணிகொள் தேர்வழிக்
கடுங்கண் பருகுநர் நடுங்குகை உகத்த . . . . [15]

நறுஞ்சேறு ஆடிய வறுந்தலை யானை
நெடுனகர் வரைப்பின் படுமுழா ஓர்க்கும்
உறந்தை யோனே குருசில்;
பிறன்கடை மறப்ப நல்குவன், செலினே!

பொருளுரை:

பாணன் தோற்றம் - தோல் உரித்த உடும்பு கிடப்பது போல எலும்பு தோன்றும் உடலுடன் பசியுடன் காணப்பட்டான். கேள்வி என்பது யாழ். அதனை அவன் மீட்டியபோது சிலர் மட்டுமே கேட்டனர். அரசன் இருப்பு - செம்புள்ளிகள் இட்டு, அணிகலன் பூண்ட அழகிய மார்பினைக் கொண்டவன். மகளிரின் மென்மைக்கு வணங்குவான். ஆண்களை அடக்கும் பெருமை கொண்டவன் அந்த நெடுந்தகை. பிறந்த குழந்தைக்குச் சுரக்கும் தாயின் முலை போல மரம் சாய்க்கும் வெள்ளம் வரும் காவிரி ஊட்டும் நாட்டை உடையவன். போர் மறவர் - நாட்டிலே உட்பூசல் எனக் காரணம் காட்டி அரசன் போருக்கு அனுப்பாததால் செத்தாவது ஒழிவோம் என்று திணவெடுக்கும் தோளைத் தட்டிக் காட்டுபவர்கள். உறையூர் - போர்ப்பறை முழக்கம் இல்லாமல் தேர் செல்லும் வழியில் கை கவித்துத் கள் பருகுவோர் உகுத்த கள்ளின்மீது யானை நடந்து சேறாகிக் கிடக்கும் தெருக்களைக் கொண்டது. அங்கு மகிழ்ச்சிப் பெருக்கில் முழங்கும் முழவின் ஓசையைக் கேட்டுக்கொண்டு அரசன் இருப்பான்.